வைரஸ் தொற்றுக்கு மேலும் 20 பேர் பலி: கர்நாடகத்தில் புதிதாக 1,279 பேருக்கு கொரோனா
கர்நாடகத்தில் புதிதாக 1,279 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. வைரஸ் தொற்றால் மேலும் 20 பேர் பலியாகி உள்ளனர். கர்நாடகத்தில் நேற்றைய கொரோனா பாதிப்பு குறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
பெங்களூரு,
கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 95 ஆயிரத்து 284 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டிருந்தனர். இந்த நிலையில் மாநிலத்தில் புதிதாக 1,279 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் கொரோனா பாதித்தோரின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 96 ஆயிரத்து 563 ஆக அதிகரித்துள்ளது. கொரோனாவுக்கு மேலும் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் வைரஸ் தொற்றால் இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 11 ஆயிரத்து 900 ஆக உயர்ந்துள்ளது.
புதிதாக பாகல்கோட்டையில் 9 பேர், பல்லாரியில் 15 பேர், பெலகாவியில் 14 பேர், பெங்களூரு புறநகரில் 24 பேர், பெங்களூரு நகரில் 728 பேர், பீதரில் 2 பேர், சாம்ராஜ்நகரில் 12 பேர், சிக்பள்ளாப்பூரில் 34 பேர், சிக்கமகளூருவில் 12 பேர், சித்ரதுர்காவில் 41 பேர், தட்சிண கன்னடாவில் 34 பேர், தாவணகெரேயில் 6 பேர், தார்வாரில் 14 பேர், கதக்கில் 3 பேர், ஹாசனில் 31 பேர், ஹாவேரியில் 12 பேர், கலபுரகியில் 12 பேர், குடகில் 8 பேர், கோலாரில் 16 பேர், கொப்பலில் 9 பேர், மண்டியாவில் 40 பேர், மைசூருவில் 71 பேர், ராய்ச்சூரில் 9 பேர், ராமநகரில் 8 பேர், சிவமொக்காவில் 33 பேர், துமகூருவில் 33 பேர், உடுப்பியில் 15 பேர், உத்தரகன்னடாவில் 15 பேர், விஜயாப்புராவில் 10 பேர், யாதகிரியில் 9 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது.
பெங்களூரு நகரில் 13 பேர், தட்சிண கன்னடாவில் 2 பேர், பெங்களூரு புறநகர், தார்வார், கலபுரகி, மைசூரு, துமகூருவில் தலா ஒருவர் என மொத்தம் 20 பேர் கொரோனாவுக்கு பலியாகியுள்ளனர். நேற்று 1 லட்சத்து ஒரு ஆயிரத்து 58 பேருக்கு பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. மாநிலத்தில் இதுவரை மேற்கொள்ளப்பட்ட பரிசோதனைகளின் எண்ணிக்கை 1 கோடியே 19 லட்சத்து 79 ஆயிரத்து 471 ஆக உயர்ந்துள்ளது. நேற்று 3,218 பேர் குணம் அடைந்து வீடு திரும்பினர். இதுவரை 8 லட்சத்து 61 ஆயிரத்து 588 பேர் குணம் அடைந்துள்ளனர். 23 ஆயிரத்து 56 பேர் மருத்துவ சிகிச்சையில் உள்ளனர். தீவிர சிகிச்சை பிரிவில் 265 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள்.
இவவாறு சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
Related Tags :
Next Story