சுகாதாரத்துறையின் ஒப்புதல் கிடைத்த பிறகே 5 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் - மந்திரி வர்ஷா கெய்க்வாட் தகவல்


சுகாதாரத்துறையின் ஒப்புதல் கிடைத்த பிறகே 5 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் - மந்திரி வர்ஷா கெய்க்வாட் தகவல்
x
தினத்தந்தி 10 Dec 2020 3:45 AM IST (Updated: 10 Dec 2020 6:04 AM IST)
t-max-icont-min-icon

சுகாதாரத்துறையின் ஒப்புதல் கிடைத்த பிறகே 5 முதல் 8-ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும் என்று மந்திரி வர்ஷா கெய்க்வாட் கூறினார். மராட்டிய பள்ளிக்கல்வித்துறை மந்திரி வர்ஷா கெய்க்வாட் நேற்று நிருபர்களிடம் கூறியதாவது:-

மும்பை,

மாநிலத்தில் அந்தந்த உள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் முடிவின் பேரில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகளை கடந்த 23-ந் தேதி முதல் திறந்து கொள்ள அனுமதிக்கப்பட்டது.

அதன்படி 25 மாவட்டங்களில் வகுப்புகள் தொடங்கப்பட்டன. தொடக்க நாட்களில் 3 லட்சம் மாணவர்கள் பள்ளிக்கு வருகை தந்தனர். கடந்த வாரம் அது 5 லட்சமாக உயர்ந்தது.

இந்தநிலையில் 5 முதல் 8-ம் வகுப்புகளை திறப்பது குறித்து பொது சுகாதாரத்துறையுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. அந்த துறையின் ஒப்புதல் கிடைத்தவுடன் பள்ளிகள் திறக்கப்படும். குறிப்பாக மும்பை, மும்பை புறநகர், தானே, புனே, நாசிக் உள்ளிட்ட பெரிய நகரங்களில் பொது சுகாதாரத்துறையின் ஒப்புதல் கிடைத்தப்பிறகே பள்ளிகள் திறக்கப்படும். இதுகுறித்து பெற்றோர் மற்றும் உள்ளூர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தப்பட்டு வருகிறது. உள்ளூர் அதிகாரிகளும் பள்ளிகள் திறப்புக்கு முன் ஆசிரியர்களுக்கு கொரோனாவை கண்டறிய ஆர்.டி.-பி.சி.ஆர். பரிசோதனை செய்து வருகிறார்கள்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story