ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் நேரடி நெல் கொள்முதல் நிலையம் எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்
ஈரோடு பி.பி.அக்ரஹாரம் பகுதியில் அமைக்கப்பட்டு உள்ள நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை எம்.எல்.ஏ.க்கள் திறந்து வைத்தனர்.
ஈரோடு,
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பி.பி.அக்ரஹாராம் பகுதியில் அரசின் நேரடி கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு உள்ளது. இதன் திறப்பு விழா நேற்று நடந்தது. விழாவுக்கு மாவட்ட வருவாய் அதிகாரி கவிதா தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் கே.வி.ராமலிங்கம், கே.எஸ்.தென்னரசு ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு, புதிய நேரடி நெல் கொள்முதல் நிலையத்தை திறந்து வைத்தனர்.
ஆவணங்கள்
இதில் தமிழக நுகர்பொருள் வாணிப கழக மண்டல மேலாளர் பானுமதி, துணை மண்டல மேலாளர் விஜயா, தரக்கட்டுப்பாடு துணை மேலாளர் லியோ ராபர்ட் லாரன்ஸ், உதவி மேலாளர் (வாணிபம்) மணிகண்டன், வேளாண் இணை இயக்குனர் சின்னச்சாமி, தாசில்தார் பரிமளாதேவி, அ.தி.மு.க. பகுதி செயலாளர்கள் கே.சி.பழனிச்சாமி, ஜெகதீஷ், தோல் பதனிடும் ஆலை சங்க தலைவர் கருப்பணன் உள்பட பலர் கலந்து கொண்டார்கள்.
இதுகுறித்து நுகர்பொருள் வாணிப கழக அதிகாரிகள் கூறும்போது, ‘நேரடி கொள்முதல் நிலையத்திற்கு நெல் விற்பனை செய்ய வரும் விவசாயிகள் கிராம நிர்வாக அலுவலர் சான்று, நெல் விளைந்த நிலத்தின் பட்டா, சிட்டா, அடங்கல், ஆதார் அட்டை நகல், வங்கி புத்தகம் நகல், பாஸ்போர்ட் அளவு புகைப்படம் -2 ஆகிய ஆவணங்களை கண்டிப்பாக கொண்டு வர வேண்டும்.
ரூ.220 கோடி
உரிய ஆவணங்கள் இல்லாமல் கொண்டு வரும் நெல் எந்த காரணம் கொண்டும் கொள்முதல் நிலையத்தில் அனுமதிக்கப்பட மாட்டாது. இரவு நேரங்கள் மற்றும் கொள்முதல் நிலைய பணியாளர்கள் இல்லாத போது தன்னிச்சையாக கொள்முதல் நிலையத்தில் அனுமதியின்றி கொட்டப்படும் நெல்லிற்கு நிர்வாகம் பொறுப்பேற்காது. விவசாயிகள் மட்டுமே கொள்முதல் நிலையத்துக்கு தங்கள் நெல்லினை கொண்டு வரவேண்டும். வேறு யார் மூலமும் நெல்லை விற்பனைக்கு கொண்டு வரக்கூடாது.
நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் விவசாயிகள் நெல்லினை விற்பனை செய்ய எந்தவித கட்டணமும் வசூல் செய்யப்படுவதில்லை. விவசாயிகள் தங்களது நெல்லினை காலை 9.30 மணி முதல் மதியம் 1.30 மணி வரையும், பிற்பகல் 2.30 மணி முதல் மாலை 6.30 மணி வரையும் விற்பனைக்கு கொண்டுவரலாம். இங்கு ‘ஏ’ கிரேடு நெல் குவிண்டால் ஒன்றுக்கு குறைந்தபட்ச ஆதாரவிலை மற்றும் ஊக்க தொகை சேர்த்து ரூ.1,958-க்கும், பொது ரக நெல் ரூ.1,918-க்கும் கொள்முதல் செய்யப்படும். ஈரோடு மாவட்டத்தில் கடந்த 2019 -2020-ம் ஆண்டில் 1 லட்சத்து 20 ஆயிரம் மெட்ரிக் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு ரூ.220 கோடி விவசாயிகள் வங்கி கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்பட்டு உள்ளது’ என்றனர்.

Related Tags :
Next Story