நாமக்கல்லில் ரூ.15 கோடியில் சாலை விரிவாக்க பணி அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்


நாமக்கல்லில் ரூ.15 கோடியில் சாலை விரிவாக்க பணி அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 10 Dec 2020 3:34 PM GMT (Updated: 10 Dec 2020 3:34 PM GMT)

நாமக்கல்-திருச்சி சாலை 2.2 கி.மீட்டர் தொலைவுக்கு ரூ.15 கோடி செலவில் 4 வழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதற்கான பணியை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார்.

நாமக்கல், 

நெடுஞ்சாலைத்துறை சார்பில் நாமக்கல்-திருச்சி சாலை நளா ஓட்டலில் இருந்து வேப்பனம் வரை 2.2 கி.மீட்டர் தொலைவுக்கு 4 வழிச்சாலையாக சுமார் ரூ.15 கோடி செலவில் விரிவாக்கம் செய்யப்பட உள்ளது. இதேபோல் கருப்பட்டிபாளையம் சாலை ரூ.1½ கோடி செலவில் இருவழிச்சாலையாக விரிவாக்கம் செய்யப்பட உள்ளது.

இதற்கான பூமிபூஜை நடந்தது. விழாவுக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். கே.பி.பி.பாஸ்கர் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, கொட்டும் மழையில் பணிகளை தொடங்கி வைத்தார்.

இந்த நிகழ்ச்சியில் உதவி கலெக்டர் கோட்டைகுமார், நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் சந்திரசேகரன், உதவி கோட்ட பொறியாளர் அசோக்குமார், உதவி பொறியாளர் சிவக்குமார், முன்னாள் மாவட்ட கவுன்சிலர் மயில்சுந்தரம், ஒன்றியக்குழு துணை தலைவர் ராஜா என்கிற செல்வக்குமார், வகுரம்பட்டி ஊராட்சி மன்ற தலைவர் ராஜா என்கிற ரகுமான் மற்றும் அரசு அதிகாரிகள், அ.தி.மு.க.வினர், பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

இதேபோல் நாட்டார்மங்கலத்தில் புதிதாக கட்டி முடிக்கப்பட்ட கால்நடை கிளை நிலையத்தையும் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். மேலும் ஆவல்நாயக்கன்பட்டியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கால்நடை மருந்தகம் கட்டும் பணியையும் அவர் தொடங்கி வைத்தார்.

Next Story