தூத்துக்குடியில் போலீசார் குறை தீர்க்கும் முகாம்


தூத்துக்குடியில் போலீசார் குறை தீர்க்கும் முகாம்
x
தினத்தந்தி 11 Dec 2020 3:45 AM IST (Updated: 10 Dec 2020 10:44 PM IST)
t-max-icont-min-icon

தூத்துக்குடியில் போலீசாருக்கான குறை தீர்க்கும் முகாம் நடந்தது.

தூத்துக்குடி,

தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள அனைத்து போலீஸ் நிலையங்களில் பணியாற்றும் போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசாருக்கான குறை தீர்க்கும் முகாம், தூத்துக்குடி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலக கூட்ட அரங்கில் நடந்தது. முகாமுக்கு போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமை தாங்கினார்.

முகாமில் தூத்துக்குடி மாவட்டத்தில் பணிபுரியும் போலீஸ்காரர்கள் முதல் சப்-இன்ஸ்பெக்டர்கள் வரை மொத்தம் 32 பேர் கலந்து கொண்டனர். அவர்கள் பல்வேறு குறைகள் குறித்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் மனு கொடுத்தனர்.

மனுக்களை பெற்றுக்கொண்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார், ‘போலீசாரின் குறைகளை களைய விரைந்து நடவடிக்கை எடுக்கப்படும். எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து சம்பந்தப்பட்ட போலீசாருக்கு பதில் அளிக்கப்படும். மாவட்டத்தில் போலீஸ் குறை தீர்க்கும் முகாம் ஒவ்வொரு வாரமும் நடைபெறும்’ என்றார்.

முகாமில் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு செல்வன், தனிப்பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர் பேச்சிமுத்து மற்றும் போலீசார் கலந்து கொண்டனர்.

Next Story