அரசு டாக்டர் பூட்டிய வீட்டுக்குள் மர்ம சாவு விஷ ஊசி போட்டு தற்கொலையா?


அரசு டாக்டர் பூட்டிய வீட்டுக்குள் மர்ம சாவு விஷ ஊசி போட்டு தற்கொலையா?
x
தினத்தந்தி 11 Dec 2020 3:30 AM IST (Updated: 11 Dec 2020 5:04 AM IST)
t-max-icont-min-icon

ராயப்பேட்டை அரசு டாக்டர் பூட்டிய வீட்டுக்குள் மர்மமான முறையில் உயிரிழந்துள்ளார். இவர் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்துக் கொண்டாரா? என குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

சென்னை,

சென்னை அசோக்நகர் 62-வது தெருவில் வசித்து வந்தவர் வெங்கடேசன் (வயது 47) . இவர் சென்னை ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் மயக்கவியல் துறையில் டாக்டராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி திருவேணி (42). இவர் தனியார் கண் மருத்துவமனையில் கண் டாக்டராக பணி செய்து வருகிறார். இவர்களுக்கு 2 பெண் குழந்தைகள் உள்ளனர்.

கடந்த சில நாட்களாக கணவன்-மனைவி இடையே அடிக்கடி குடும்பத்தகராறு ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இரவு இருவருக்கும் இடையில் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால், அவரது மனைவி கோபித்துக்கொண்டு, ஜோதிராமலிங்கம் தெருவில் உள்ள வெங்கடேசனின் தந்தை வீட்டிற்கு சென்று விட்டார்.

இதனால் வெங்கடேசன் மிகுந்த மனஉளைச்சலில் இருந்துள்ளார். இந்தநிலையில், நேற்று காலை அவரது வீட்டின் கதவு வெகுநேரமாக திறக்கவில்லை. சந்தேகமடைந்த அக்கம்பக்கத்தினர், கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்தனர். அப்போது அவர் வீட்டில் இறந்துகிடந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தனர்.

மேலும், அவரது கையில் ஊசி குத்திய தடமும், அருகில் ஊசி ஒன்றும் கிடந்துள்ளது. இதையடுத்து போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. குமரன் நகர் போலீசாரும், உதவி கமிஷனர் அனந்தராமனும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, அவரது உடலை மீட்டு ஓமந்தூரார் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த போலீசார் வெங்கடேசன் விஷ ஊசி போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிரேத பரிசோதனை நடந்த பிறகே முழு விவரமும் தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.

Next Story