மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது


மூதாட்டியிடம் தங்கச்சங்கிலி பறிப்பு: குண்டர் சட்டத்தில் வாலிபர் கைது
x
தினத்தந்தி 11 Dec 2020 11:14 AM IST (Updated: 11 Dec 2020 11:14 AM IST)
t-max-icont-min-icon

திருப்பூரில் மூதாட்டியிடம் தங்கச் சங்கிலி பறித்த வாலிபரை போலீசார் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்தனர்.

திருப்பூர்,

திருப்பூர் மாநகரம் அனுப்பர்பாளையம் கலைவாணி தியேட்டர் அருகே தண்ணீர் பிடிப்பதற்காக நடந்து சென்ற 75 வயது மூதாட்டியிடம் இருந்து 3 பவுன் சங்கிலியை பறித்து சென்றது தொடர்பாக அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இந்த வழக்கில் தூத்துக்குடி மாவட்டம் மறவன்மடத்தை சேர்ந்த முருகன் (வயது 30) என்பவரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

முருகன் மீது அனுப்பர்பாளையம் போலீஸ் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், தூத்துக்குடி மாவட்டம் ஏரல் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தாளமுத்து நகர் போலீஸ் நிலையத்தில் ஒரு வழிப்பறி வழக்கும், சிப்காட் போலீஸ் நிலையத்தில் 4 திருட்டு வழக்கும், நாசரேத் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், தூத்துக்குடி மத்திய போலீஸ் நிலையத்தில் ஒரு வழக்கும், சென்னை பழவந்தாங்கல் போலீஸ் நிலையத்தில் ஒரு திருட்டு வழக்கும், நுங்கம்பாக்கத்தில் ஒரு வழக்கும் என மொத்தம் 11 வழக்குகள் இவர் மீது உள்ளது.

முருகனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க போலீஸ் கமிஷனர் கார்த்திகேயன் உத்தரவிட்டார். கோவை மத்திய சிறையில் உள்ள முருகனிடம் குண்டர் சட்டத்தின் கீழ் சிறையில் அடைப்பதற்கான உத்தரவு நேற்று வழங்கப்பட்டது.

42 பேர் கைது

திருப்பூர் மாநகரில் பொது அமைதிக்கும், பொது மக்களுக்கும் தொடர்ந்து அச்சுறுத்தும் வகையில் குற்றச்செயல்களில் ஈடுபட்டவர்கள் இந்த ஆண்டில் இதுவரை 42 பேர் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இவ்வாறு அந்த செய்திக்குறிப்பில் போலீஸ் கமிஷனர் கூறியுள்ளார்.

Next Story