காங்கேயம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்


காங்கேயம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்
x
தினத்தந்தி 11 Dec 2020 11:17 AM IST (Updated: 11 Dec 2020 11:17 AM IST)
t-max-icont-min-icon

காங்கேயம் அருகே ஓடும் ஆம்புலன்சில் பெண்ணுக்கு பிரசவம்.

காங்கேயம்,

கொல்கத்தாவை சேர்ந்தவர் ஜின்னா தலி முல்லா (வயது 28). இவரது மனைவி தன்ஜீலா(22). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இவர்கள் திருப்பூர் மாவட்டம் காங்கேயம் அருகே உள்ள நல்லிகவுண்டம்பாளையத்தில் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இதற்கிடையே தன்ஜீலா மீண்டும் கர்ப்பமடைந்தார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த அவருக்கு நேற்று முன்தினம் இரவு திடீரென பிரசவ வலி ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து 108 ஆம்புலன்சுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் ஆம்புலன்சில் மருத்துவ உதவியாளர் அஜித் மற்றும் டிரைவர் முத்துகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, கர்ப்பிணியை மீட்டு திருப்பூர் அரசு தலைமை மருத்துவமனைக்கு அழைத்துவந்தனர்.

இதற்கிடையே சிவன்மலை அருகே வந்த போது, தன்ஜீலாவிற்கு பிரசவ வலி அதிகமாக ஏற்பட்டதை தொடர்ந்து, ஓடும் ஆம்புலன்சில் பிரசவம் பார்க்கப்பட்டது. இதில் அவருக்கு அழகான பெண் குழந்தை பிறந்தது. தொடர்ந்து தாய் மற்றும் குழந்தை இருவருக்கும் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

Next Story