புதுச்சேரி- காரைக்காலில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழப்பு
புதுவை, காரைக்காலில் கொரோனாவுக்கு மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுச்சேரி,
புதுவையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு கொரோனா தொற்று அதிக அளவில் பரவியது. நாள் தோறும் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை புதிய உச்சத்தை தொட்டு வந்தது. கடந்த ஒரு மாதமாக தொற்று பாதிப்பு மளமளவென சரிந்தது. நேற்று காலை 10 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் 1,465 பேருக்கு கொரோனா பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 43 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. 48 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பியுள்ளனர்.
நேற்று முன்தினம் 2 பேர் பலியான நிலையில் புதுவை, காரைக்காலில் தலா ஒருவர் என நேற்று மேலும் 2 பேர் உயிரிழந்துள்ளனர்.
புதுவை மாநிலத்தில் இதுவரை 4 லட்சத்து 30 ஆயிரத்து 517 பேருக்கு தொற்று பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. அவர்களில் 3 லட்சத்து 88 ஆயிரத்து 831 பேருக்கு தொற்று இல்லை என்பது தெரியவந்துள்ளது. 37 ஆயிரத்து 406 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
அவர்களில் 204 பேர் ஆஸ்பத்திரிகளிலும், 163 பேர் வீடுகளிலும் தனிமைப்படுத்தப்பட்டு தொடர் சிகிச்சையில் உள்ளனர். 36 ஆயிரத்து 420 பேர் குணமடைந்துள்ளனர். இதுவரை பலியானவர்களின் எண்ணிக்கை 619 ஆக உயர்ந்துள்ளது. அவர்களில் 506 பேர் புதுச்சேரியையும், 60 பேர் காரைக்காலையும், 45 பேர் ஏனாமையும், 8 பேர் மாகியையும் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. புதுவையில் கொரோனா உயிரிழப்பு 1.65 சதவீதமாகவும், குணமடைவது 97.36 சதவீதமாகவும் உள்ளது.
Related Tags :
Next Story