நெல்லையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு


நெல்லையில் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு
x
தினத்தந்தி 12 Dec 2020 4:15 AM IST (Updated: 12 Dec 2020 1:28 AM IST)
t-max-icont-min-icon

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் பங்கேற்க வந்த துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு மாவட்ட எல்லையில் அ.தி.மு.க.வினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நெல்லை,

நெல்லை மாவட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் இல்ல திருமண விழாவில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் நேற்று கலந்து கொண்டார். இதற்காக அவர் கார் மூலம் கோவில்பட்டி வழியாக நெல்லைக்கு வந்தார். அவருக்கு நெல்லை மாவட்ட எல்லையான கங்கைகொண்டானில் மாவட்ட நிர்வாகம் சார்பில், கலெக்டர் விஷ்ணு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

தொடர்ந்து நெல்லை மாவட்ட அ.தி.மு.க. செயலாளரும், மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவருமான தச்சை கணேசராஜா தலைமையில் திரளான அ.தி.மு.க.வினர், துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர்.

நிகழ்ச்சியில் தென்காசி தெற்கு மாவட்ட செயலாளர் செல்வமோகன்தாஸ் பாண்டியன் எம்.எல்.ஏ., தென்காசி வடக்கு மாவட்ட செயலாளர் கிருஷ்ணமுரளி என்ற குட்டியப்பா, ரெட்டியார்பட்டி நாராயணன் எம்.எல்.ஏ., நெல்லை மாவட்ட அ.தி.மு.க. அவைத்தலைவர் சவுந்தரராஜன், மாவட்ட ஜெயலலிதா பேரவை செயலாளர் ஜெரால்டு, வீ.கருப்பசாமி பாண்டியன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

அவர்கள் சால்வை அணிவித்தும், பூங்கொத்துகள் கொடுத்தும் துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். ஓ.பன்னீர்செல்வத்துடன் காரில்அ.தி.மு.க. வழிகாட்டு குழு உறுப்பினரும், அமைப்பு செயலாளருமான மனோஜ்பாண்டியன் வந்தார்.

Next Story