டிரான்ஸ்பார்மரை பழுது பார்த்தபோது பரிதாபம்: மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியர் பலி
கொடைரோடு அருகே டிரான்ஸ்பார்மரை பழுது பார்த்தபோது மின்சாரம் பாய்ந்து ஒப்பந்த ஊழியர் பரிதாபமாக உயிரிழந்தார்.
கொடைரோடு,
கொடைரோடு அருகே குல்லலக்குண்டு ஊராட்சிக்கு உட்பட்ட பொட்டிசெட்டிபட்டி காந்திநகரை சேர்ந்த பெருமாள் மகன் ராஜா (வயது 32). இவர் பள்ளப்பட்டி மின்வாரிய அலுவலகத்தில் ஒப்பந்த ஊழியராக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று குல்லலக்குண்டுவில் உள்ள டிரான்ஸ்பார்மர் ஒன்று பழுதாகி, அந்த ஊரில் மின்தடை ஏற்பட்டது. இதுகுறித்து தகவல் அறிந்த ராஜா, அங்கு சென்று டிரான்ஸ்பார்மரில் ஏறி பழுதை சரிசெய்து கொண்டிருந்தார். அப்போது அவர் மீது எதிர்பாராதவிதமாக மின்சாரம் பாய்ந்தது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர், டிரான்ஸ்பார்மரின் கம்பிகளில் தொங்கியபடி உயிருக்கு போராடினார். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர், ராஜாவை மீட்டு சிகிச்சைக்காக நிலக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு ராஜாவை பரிசோதனை செய்த டாக்டர்கள், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இதுகுறித்து அம்மையநாயக்கனூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் லாவண்யா வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார். இறந்துபோன ராஜாவுக்கு மனைவி, 2 குழந்தைகள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story