மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது
நாமக்கல் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சிறப்பு முகாம் இன்றும், நாளையும் நடக்கிறது. இது தொடர்பாக கலெக்டர் மெகராஜ் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது.
நாமக்கல்,
நாமக்கல் மாவட்டத்தில் கடந்த மாதம் 16-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணிகள் நடைபெற்று வருகிறது. இப்பணியின்போது, 1.1.2021 அன்று 18 வயது பூர்த்தியடைந்தவர்கள் தங்களின் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்த்துக்கொள்ளலாம்.
மேலும் இதுவரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்து கொள்ளாதவர்கள், திருத்தங்கள் செய்ய விரும்பும் நபர்கள் உரிய விண்ணப்பங்களை அனைத்து வாக்குச்சாவடி மையங்்கள், உதவி கலெக்டர் அலுவலகங்கள், தாசில்தார் அலுவலகங்களி்ல் அளிக்கலாம்.
மேலும் இன்று (சனிக் கிழமை) மற்றும் நாளை (ஞாயிற்றுக்கிழமை) ஆகிய 2 நாட்கள் அனைத்து வாக்குச்சாவடி மையங்களிலும் சிறப்பு முகாம்கள் இரண்டாம் முறையாக நடைபெற உள்ளது. அந்த நாட்களிலும் பெயர் சேர்த்தல், நீ்க்கம், திருத்தம் தொடர்பான மனுக்களை பொதுமக்கள் அளிக்கலாம்.
நாமக்கல் மாவட்டத்தில் 18 வயதுடைய வாக்காளர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவாகவே பதிவாகி உள்ளது. எனவே 18 வயது பூர்த்திடைந்த அனைவரும் இந்த நல்வாய்ப்பை பயன்படுத்தி வாக்காளர்களாக பதிவு செய்து கொள்ள வேண்டும். இவ்வாறு அதில் கூறி உள்ளார்.
Related Tags :
Next Story