புதுவையில் சாலைகளை சீரமைக்கக்கோரி பா.ஜ.க. போராட்டம்
சேதமடைந்த சாலைகளை சீரமைக்கக்கோரி பா.ஜ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.
சாலைகள் சேதம்
புதுவையில் சமீபத்தில் பெய்த புயல் மழை காரணமாக சாலைகள் கடுமையாக சேதமடைந்துள்ளன. சாலைகளில் ஜல்லி கற்கள் பெயர்ந்து கனரக வாகனங்கள் செல்லும்போது புழுதி பறக்கிறது.
சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் போக்குவரத்துக்கு தகுதி இல்லாததாக மாறியுள்ளது. இதனால் அடிக்கடி விபத்துகளும் ஏற்படுகின்றன.
ஆர்ப்பாட்டம்
சாலைகளை சீரமைக்கக்கோரியும், முன்னறிவிப்பின்றி மின்சாரத்தை துண்டிப்பதை கண்டித்தும், தகுதி உள்ளவர்களுக்கு முதியோர் உதவித்தொகை வழங்கக்கோரியும் லாஸ்பேட்டை தொகுதி சாந்திநகர் கிளை சார்பில் விநாயகர் கோவில் அருகே கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு மாநில பா.ஜ.க. தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ. தலைமை தாங்கினார். தொகுதி தலைவர் சோமசுந்தரம், மாநில செயலாளர்கள் ரத்தினவேல், லதா, வல்லுனர் பிரிவு தலைவர் ஸ்ரீதர் பிள்ளை ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் மாநில மகளிர் அணி பொதுச்செயலாளர் கனகவல்லி, இளைஞர் அணி துணை தலைவர் ராக்பேட்ரிக், பொதுச்செயலாளர் வேல்முருகன், தொகுதி செயலாளர் ரமேஷ், கிளை தலைவர் கண்ணன், ஊடக பொறுப்பாளர் குருசங்கரன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
Related Tags :
Next Story