விவசாயிகளுக்கு ஆதரவாக போராட்டம்: புதுவை தலைமை தபால் நிலையம் முற்றுகை
மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் சட்டங்களை வாபஸ்பெறக்கோரி டெல்லியை முற்றுகையிட்டு விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.
அவர்களுக்கு ஆதரவாக நாடு முழுவதும் அரசியல் கட்சிகள், தொழிற்சங்கங்கள், விவசாய சங்கத்தினர் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.
வேளாண் சட்டங்களை வாபஸ் பெறக்கோரி புதுவை தலைமை தபால் நிலையத்தை காவிரி உரிமை மீட்புக்குழுவினர் முற்றுகையிட்டனர். இந்த போராட்டத்துக்கு ஒருங்கிணைப்பாளர் வேல்சாமி தலைமை தாங்கினார். போராட்டத்தில் தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் ஸ்ரீதர், தமிழர் களம் அழகர், நாம் தமிழர் கட்சி சிவக்குமார், ரமேஷ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முற்றுகையில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்திய போலீசார் அவர்களை அங்கிருந்து அப்புறப்படுத்தினார்கள்.
Related Tags :
Next Story