திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது
திருச்செந்தூர் அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா தொடங்கியது.
திருச்செந்தூர்,
திருச்செந்துர் கடற்கரையில் அமைந்துள்ள அய்யா வைகுண்டர் அவதாரப்பதியில் திருஏடு வாசிப்பு திருவிழா நேற்று முன்தினம் தொடங்கியது.
விழாவை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர் தொடங்கி வைத்தார். பேராசிரியை ஸ்ரீமதி மற்றும் வைகுண்ட மகராஜன் ஆகியோர் திருஏடு வாசித்தனர்.
இந்த திருவிழா 17 நாட்கள் நடக்கிறது. விழா நாட்களில் தினமும் மாலை 3 மணிக்கு திருஏடு வாசிப்பு நடக்கிறது.
15-ம் திருநாளான வருகிற 25-ந் தேதி மாலை 5 மணிக்கு திருக்கல்யாணமும், 17-ம் திருநாளான 27-ந் தேதி மாலை 5 மணிக்கு பட்டாபிஷேகமும் நடக்கிறது. இந்த இரு நாட்களிலும் மாலை 6 மணிக்கு அய்யா புஷ்ப வாகன பவனி நடைபெறுகிறது.
விழா ஏற்பாடுகளை அய்யாவழி அகில திருக்குடும்ப மக்கள் சபை தலைவர் வள்ளியூர் எஸ்.தர்மர், செயலாளர் பொன்னுத்துரை, பொருளாளர் ராமையா, கவுரவ தலைவர் சுந்தரபாண்டி, துணை தலைவர் தோப்புமணி, துணை செயலாளர் ராஜேந்திரன், இணை தலைவர்கள் அய்யாபழம், பேராசிரியர் விஜயகுமார், பால்சாமி, ராஜதுரை, இணை செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், தங்ககிருஷ்ணன், செல்வின், வரதராஜபெருமாள் மற்றும் நிர்வாகிகள் செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story