கரூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது


கரூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது
x
தினத்தந்தி 13 Dec 2020 6:01 AM IST (Updated: 13 Dec 2020 6:01 AM IST)
t-max-icont-min-icon

கரூரில் போலி நகைகளை அடகு வைத்து ரூ.2 லட்சம் மோசடி செய்த வாலிபர் கைது செய்யப்பட்டார்.

கரூர்,

கரூர் தாந்தோணிமலை பகுதிக்குட்பட்ட கணபதிபாளையம் தென்றல் நகர் பகுதியை சேர்ந்தவர் ஸ்ரீ பிரகாஷ் (வயது 35). இவர் கரூரில் உள்ள ஒரு கடன் வழங்கும் நிறுவனத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 10 வளையல்களை தங்கம் எனக்கூறி அடகுவைத்து, ரூ.1 லட்சத்து 80 ஆயிரம் கடன் பெற்றார். இதற்கான ரசீதும் நிறுவனத்தில் இருந்து அவர் வாங்கி உள்ளார்.

வாலிபர் கைது

இந்நிலையில் ஓராண்டு கடந்தும், ஸ்ரீபிரகாஷ் நகையை மீட்டு செல்ல வரவில்லை. இதையடுத்து அந்த நிறுவனத்தின் ஊழியர்கள் ஸ்ரீபிரகாஷ் வழங்கிய வளையல்களை சோதித்து பார்த்தனர். அப்போது அந்த வளையல்கள் தங்க முலாம் பூசப்பட்ட போலி நகைகள் என தெரியவந்துள்ளது.

இதுகுறித்து் அந்த நிறுவனத்தின் மண்டல மேலாளர் தியாகு (39) கரூர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் சிவசுப்பிரமணியன் வழக்குப்பதிவு செய்து போலி நகைளை அடகு வைத்து மோசடியில் ஈடுபட்ட ஸ்ரீபிரகாசை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story