புதிதாக 1,203 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியது


புதிதாக 1,203 பேருக்கு வைரஸ் தொற்று கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியது
x
தினத்தந்தி 13 Dec 2020 3:45 AM IST (Updated: 13 Dec 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

கர்நாடகத்தில் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டியுள்ளது. மேலும் புதிதாக 1.203 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டுள்ளது. கர்நாடக சுகாதாரத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருந்ததாவது:-

பெங்களூரு,

கர்நாடகத்தில் நேற்று முன்தினம் வரை 8 லட்சத்து 99 ஆயிரத்து 11 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. நேற்று புதிதாக 1,203 பேருக்கு வைரஸ் தொற்று ஏற்பட்டது. இதன்மூலம் கொரோனாவால் பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 9 லட்சத்து 214 ஆக உயர்ந்தது. இதன்மூலம் கொரோனா பாதிப்பு 9 லட்சத்தை தாண்டிவிட்டது. நேற்று புதிதாக 11 பேர் இறந்தனர். இதனால் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 939 ஆக உயர்ந்து உள்ளது.

புதிதாக பாகல்கோட்டையில் 8 பேர், பல்லாரியில் 23 பேர், பெலகாவியில் 26 பேர், பெங்களூரு புறநகரில் 23 பேர், பெங்களூரு நகரில் 606 பேர், பீதரில் 16 பேர், சாம்ராஜ்நகரில் 20 பேர், சிக்பள்ளாப்பூரில் 39 பேர், சிக்கமகளூருவில் 12 பேர், சித்ரதுர்காவில் 51 பேர், தட்சிண கன்னடாவில் 53 பேர், தாவணகெரேயில் 13 பேர், தார்வாரில் 10 பேர், கதக்கில் 6 பேர், ஹாசனில் 26 பேர், ஹாவேரியில் 7 பேர், கலபுரகியில் 13 பேர், குடகில் 19 பேர், கோலாரில் 10 பேர், கொப்பலில் 12 பேர், மண்டியாவில் 25 பேர், மைசூருவில் 59 பேர், ராய்ச்சூரில் 5 பேர், ராமநகரில் 2 பேர், சிவமொக்காவில் 18 பேர், துமகூருவில் 30 பேர், உடுப்பியில் 21 பேர், உத்தர கன்னடாவில் 20 பேர், விஜயாப்புராவில் 18 பேர், யாதகிரியில் 12 பேர் கொரோனாவுக்கு பாதிக்கப்பட்டு உள்ளனர்.

நேற்று 1,531 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதன்மூலம் கொரோனாவில் இருந்து குணம் அடைந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 8 லட்சத்து 70 ஆயிரத்து 2 ஆக உள்ளது. 18 ஆயிரத்து 254 பேர் சிகிச்சையில் உள்ளனர். 244 பேர் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். நேற்று ஒரு லட்சத்து 2 ஆயிரத்து 229 பேருக்கு கொரோனா பரிசோதனை நடந்தது.

ஒட்டுமொத்தமாக இதுவரை 1 கோடியே 22 லட்சத்து 66 ஆயிரத்து 816 பேரின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளன. பெங்களூரு நகரில் 6 பேர், தட்சிண கன்னடாவில் 2 பேர், பல்லாரி, கோலார், துமகூருவில் தலா ஒருவர் என நேற்று ஒரேநாளில் 11 பேர் கொரோனாவால் இறந்தனர். 25 மாவட்டங்களில் கொரோனா பாதிப்பால் யாரும் உயிரிழக்கவில்லை.

இவ்வாறு சுகாதாரத்துறை தெரிவித்து உள்ளது.

Next Story