திருவாரூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல் சிறப்பு முகாம் கலெக்டர் சாந்தா ஆய்வு
திருவாரூரில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான முகாமினை கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
திருவாரூர்,
திருவாரூர் நகராட்சிக்குட்பட்ட வாக்குச்சாவடி மையத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் தொடர்பான சிறப்பு முகாம் நடைபெற்றது. முகாமை கலெக்டர் சாந்தா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் கூறியதாவது:-
திருவாரூர் மாவட்டத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் ஆகியவற்றை மேற்கொள்வதற்கான சிறப்பு முகாம் மாவட்டத்தில் உள்ள திருவாரூர் சட்டமன்ற தொகுதியில் 303 வாக்குச்சாவடி மையங்களிலும், திருத்துறைப்பூண்டி சட்டமன்ற தொகுதியில் 274 வாக்குச்சாவடி மையங்களிலும், நன்னிலம் சட்டமன்ற தொகுதியில் 309 வாக்குச்சாவடி மையங்களிலும், மன்னார்குடி சட்டமன்ற தொகுதியில் 282 வாக்குச்சாவடி மையங்கள் என திருவாரூர் மாவட்டத்தில் மொத்தம் 1,168 வாக்குச்சாவடி மையங்களிலும் நடைபெறுகிறது.
வலைதளத்தில்
வாக்காளர் பட்டியல்களை www.elections.tn.gov.in என்ற வலைதளத்திலும் காணலாம். மேலும் www.nvsp.in என்ற வலைதளத்திலும் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தங்கள் மேற்கொள்ள விண்ணப்பித்து பயன் பெற்றிட வேண்டும்.
இவ்வாறு கலெக்டர் கூறினார்.
ஆய்வின் போது மாவட்ட வருவாய் அதிகாரி பொன்னம்மாள், உதவி கலெக்டர் பாலச்சந்திரன், நகராட்சி ஆணையர் முத்துக்குமரன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story