கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு


கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் சாவு
x
தினத்தந்தி 13 Dec 2020 11:32 AM IST (Updated: 13 Dec 2020 11:32 AM IST)
t-max-icont-min-icon

கள்ளக்குறிச்சி அருகே கிணற்றில் மூழ்கி பள்ளி மாணவன் பரிதாபமாக இறந்தான். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கள்ளக்குறிச்சி, 

கள்ளக்குறிச்சி அருகே ஆலத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சுப்பிரமணியன். விவசாயி. இவருடைய மகன் தனுஷ் (வயது 15). இவன் மூரார்பாளையத்தில் உள்ள அரசு பள்ளியில் பிளஸ்-1 படித்து வந்தான். கடந்த ஒரு வாரமாக நீச்சல் பயிற்சி பெற்று வந்தான். இந்த நிலையில் நேற்று தங்களது விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் தனுஷ் நீச்சல் பயிற்சி மேற்கொண்டான். அப்போது எதிர்பாராதவிதமாக நீரில் மூழ்கி அவன் பரிதாபமாக இறந்தான்.

இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி தீயணைப்பு வீரர்கள் விரைந்து வந்து கிணற்றில் மூழ்கி இறந்த தனுசின் உடலை மீட்டனர். அப்போது அவனது உடலை பார்த்து பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

போலீசார் விசாரணை

இது குறித்த தகவலின் பேரில் கள்ளக்குறிச்சி போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து தனுசின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தொடர்ந்து இது குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Next Story