ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா: சேலத்தில் 70 கிலோ கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டம் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு


ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா: சேலத்தில் 70 கிலோ கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாட்டம் கொரோனா தடுப்பு பணியில் ஈடுபட்டவர்களுக்கு பாராட்டு
x
தினத்தந்தி 13 Dec 2020 10:02 PM IST (Updated: 13 Dec 2020 10:02 PM IST)
t-max-icont-min-icon

ரஜினிகாந்த் பிறந்தநாள் விழாவையொட்டி சேலத்தில் 70 கிலோ கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடினார்கள்.

சேலம், 

நடிகர் ரஜினிகாந்த் 70-வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் சேலம் சுப்பிரமணிய நகரில் உள்ள ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி கோவிலில் ரஜினி பெயரில் சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. மேலும் ரஜினிகாந்த் புதிதாக கட்சி ஆரம்பித்து அவர் அரசியல் வாழ்வில் வெற்றி பெறவும், சட்டமன்ற தேர்தலில் மக்களின் ஆதரவுடன் வெற்றி வாகை சூடவும் பிரார்த்தனை செய்யப்பட்டது.

பின்னர் கோவிலுக்கு வந்திருந்த பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. இதையடுத்து சேலம் புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாவட்ட தலைமை அலுவலகத்தில் 70 கிலோ கேக் வெட்டி ரசிகர்கள் கொண்டாடி மகிழ்ந்தனர். நிகழ்ச்சியில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் தலைமை தாங்கி கேக் வெட்டி ரசிகர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு வழங்கினார். பின்னர் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி பொதுமக்களுக்கும், அந்த வழியாக சென்ற வாகன ஓட்டிகளுக்கும் ரஜினி ரசிகர்கள் இனிப்பு வழங்கினர்.

அதன்பிறகு சேலம் அரசு ஆஸ்பத்திரியில் கொரோனா தடுப்பு பணியில் சிறப்பாக ஈடுபட்டவர்களுக்கு சால்வை அணிவித்து பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில், ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட செயலாளர் செந்தில்குமார் கலந்து கொண்டு அரசு ஆஸ்பத்திரி சூப்பிரண்டு தனபால் உள்ளிட்ட டாக்டர்கள், செவிலியர்கள், மருத்துவ ஊழியர்கள், துப்புரவு பணியாளர்கள், பாதுகாவலர்கள் என சுமார் 400 பேருக்கு சால்வை அணிவித்து பரிசுகளை வழங்கி பாராட்டு தெரிவித்தார்.

மேலும் சேலம் அங்கம்மாள் காலனியில் ரஜினி மக்கள் மன்றம் சார்பில் கேக் வெட்டி கொண்டாடப்பட்டது. தொடர்ந்து அப்பகுதி பொதுமக்களுக்கு உணவுகளை மன்றத்தின் நிர்வாகிகள் வழங்கினர். அதைப்போல் ஒன்பதாவது வார்டு கொண்டலாம்பட்டி பகுதியில் தண்ணீர் பந்தல் காளியம்மன் கோவிலில் ரஜினிகாந்த் பிறந்த நாளையொட்டி அவரது பெயரில் சிறப்பு பூஜையும், பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சிகளில் மாவட்ட இணைச் செயலாளர்கள் கணேசன், பழனிவேல், மாவட்ட துணைச் செயலாளர் சபி, மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ராகவாகனகராஜ், பெனடிக் ஜோசப், கோவிந்தராஜ், மாவட்ட இளைஞரணி செயலாளர் மோகன்ராஜ், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் மணிகண்டன், வர்த்தக அணி செயலாளர் கார்த்திகேயன், மகளிர் அணி செயலாளர் தமிழ்செல்வி, மாவட்ட மருத்துவர் அணி செயலாளர் திலக், விவசாய அணி செயலாளர் ஜெயசங்கர், ஒன்றிய செயலாளர்கள் முருகன், ராஜா, பாலு, உம்மர், மாநகர இணை செயலாளர் தளபதிராம், துணை செயலாளர் துளசிராமன், இளைஞர் அணி செயலாளர் சரவணன், மண்டல செயலாளர்கள் ஜிம்கார்த்தி, சித்தேஸ்வரன் உள்பட மன்ற நிர்வாகிகள், ரஜினி ரசிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.

இதேபோல் மாநகராட்சிக்குட்பட்ட 60 வார்டுகளிலும் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி அவரது ரசிகர்கள் கேக் வெட்டியும், ஏழை எளிய மக்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கியும் கொண்டாடி மகிழ்ந்தனர். இதற்கான ஏற்பாடுகளை சேலம் மாவட்ட ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

Next Story