சத்தியமங்கலம் மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,662-க்கு விற்பனை


மல்லிகைப்பூ
x
மல்லிகைப்பூ
தினத்தந்தி 13 Dec 2020 7:45 PM GMT (Updated: 13 Dec 2020 6:05 PM GMT)

சத்தியமங்கலம் பூ மார்க்கெட்டில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,662-க்கு விற்பனை ஆனது.

சத்தியமங்கலம்
சத்தியமங்கலத்தில் கரட்டூர் ரோட்டில் பூ மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. இந்த மார்க்கெட்டில் தினமும் பூக்கள் ஏலம் நடைபெறும். அதன்படி நேற்று ஏலம் நடந்தது. இந்த ஏலத்துக்கு சத்தியமங்கலம் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் இருந்து ஏராளமான விவசாயிகள் தங்களுடைய பூக்களை விற்பனைக்காக கொண்டு வந்திருந்தனர்.

நேற்று நடந்த ஏலத்தில் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,662-க்கும், முல்லை ரூ.760-க்கும், காக்கடா ரூ.800-க்கும், செண்டுமல்லி ரூ.77-க்கும், பட்டுப்பூ ரூ.81-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.800-க்கும், சம்பங்கி ரூ.150-க்கும், அரளி ரூ.320-க்கும், துளசி ரூ.50-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் ஏலம் போனது. நேற்று முன்தினம் மல்லிகைப்பூ கிலோ ரூ.1,225-க்கும், முல்லை ரூ.800-க்கும், காக்கடா ரூ.850-க்கும், செண்டுமல்லி ரூ.84-க்கும், பட்டுப்பூ ரூ.96-க்கும், ஜாதிமல்லி ரூ.750-க்கும், கனகாம்பரம் ரூ.960-க்கும், சம்பங்கி ரூ.80-க்கும், அரளி ரூ.370-க்கும், துளசி ரூ.70-க்கும், செவ்வந்தி ரூ.200-க்கும் விற்பனை ஆனது.

நேற்று முன்தினத்தை விட நேற்று மல்லிகைப்பூ கிலோவுக்கு ரூ.437-ம், சம்பங்கி ரூ.70-ம் விலை உயர்ந்து விற்பனை ஆனது.

பவானிசாகர்
இதேபோல் பவானிசாகர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதியான தொட்டம்பாளையம், தொப்பம்பாளையம், எரங்காட்டூர், அக்கரைதத்தபள்ளி, கொத்தமங்கலம், கெஞ்சனூர், பகுத்தம்பாளையம் உள்ளிட்ட 50-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாயிகள் மல்லிகை, முல்லை, காக்கடா, சம்பங்கி உள்ளிட்ட பூக்கள் சாகுபடி செய்துள்ளனர். இங்கு விளையும் பூக்களை வியாபாரிகள் விவசாயிகளிடம் இருந்து நேரடியாக கொள்முதல் செய்து தமிழகத்தில் பல்வேறு பகுதிகளுக்கும் கர்நாடக மாநிலம் மைசூரு, பெங்களூரு உள்ளிட்ட பகுதிகளுக்கும் அனுப்புகின்றனர். நேற்று மல்லிகைப்பூ கிலோ ஒன்று ரூ.1,700-க்கும், முல்லை ரூ.750-க்கும், காக்கடா ரூ.750-க்கும், சம்பங்கி ரூ.160-க்கும் விற்பனை ஆனது.

Next Story
  • chat