தீபாவளி சீட்டு நடத்தி ரூ.19½ லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு வலைவீச்சு


தீபாவளி சீட்டு நடத்தி ரூ.19½ லட்சம் மோசடி; கணவன்-மனைவிக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 14 Dec 2020 11:30 AM IST (Updated: 14 Dec 2020 11:13 AM IST)
t-max-icont-min-icon

தவளக்குப்பத்தில் தீபாவளி சீட்டு நடத்தி ரூ.19½ லட்சம் மோசடி செய்த கணவன் -மனைவியை போலீசார் வலைவீசி தேடி வருகின் றனர்.

புதுச்சேரி,

கோவை தொண்டம்புத்தூர் குப்புசாமி நகர் பகுதியை சேர்ந்தவர் ஜோதிமுருகன். இவர் தனது மனைவி ஞானபூங்கோதையுடன் பிழைப்பிற்காக கடந்த 2016-ம் ஆண்டு புதுவை வந்தார். தவளக்குப்பம் முத்து முதலியார் வீதியில் கணவன்- மனைவி இருவரும் வாடகைக்கு வீடு எடுத்து வசித்து வந்தனர். ஓராண்டிற்கு பிறகு அவர்கள் தீபாவளி சீட்டு நடத்த தொடங்கினர். அதில் அந்த பகுதியை சேர்ந்த பலர் சேர்ந்து மாதந்தோறும் சீட்டு கட்டி வந்துள்ளனர்.

அவர்களில் நல்லவாடு முருகன் கோவில் வீதியை சேர்ந்த மீனவரான ஊத்துக் காட்டான் (வயது 47) என்ப வரும் ஒருவர். ஜோதிமுருகனும் அவரது மனைவியும் ஊத்துக் காட்டானிடம் நட்பாக பழகி வந்தனர். எனவே அவரிடம் ரூ.7½ லட்சம் கடன் வாங்கி யுள்ளனர். இதனிடையே கடந்த 2018-ம் ஆண்டு தீபாவளி சீட்டு முடிந்தும் அவர்கள் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை. இது குறித்து சீட்டு கட்டியவர்கள் கேட்டபோது கணவன்- மனைவி இருவரும் கால அவகாசம் கேட்டுள்ளனர்.

இந்த நிலையில் கடந்த 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் ஜோதிமுருகனும், அவரது மனைவி ஞான பூங்கோதையும் திடீரென யாருக்கும் தெரியாமல் இரவோடு இரவாக வீட்டை காலி செய்து விட்டு சொந்த ஊருக்கு சென்று விட்டனர். மறுநாள் காலையில் வீடு பூட்டப்பட்டு இருப்பதை பார்த்து சீட்டு கட்டியவர்களும், ஊத்துக்காட்டானும் அதிர்ச்சியடைந்தனர். கணவன்-மனைவி இருவரும் சுமார் ரூ.19½ லட்சம் வரை மோசடி செய்தது தெரிய வந்தது.

இதனால் பாதிக்கப்பட்ட ஊத்துக்காட்டான் அவர் களை பல இடங்களில் தேடி வந்துள்ளார். அப்போது கணவன்-மனைவி இருவரும் தங்கள் சொந்த ஊரில் இருப் பது தெரிந்தது. ஊத்துக்காட் டான் அங்கு சென்று அவர்களை சந்தித்து தனக்கு தர வேண்டிய பணத்தை திருப்பி கேட்டுள்ளார். அவர் கள் பணத்தை திருப்பி கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.

இது குறித்து ஊத்துக்காட்டான் புதுவை சி.பி.சி.ஐ.டி. போலீசில் புகார் செய்தார். புகாரின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் நியூட்டன் மற்றும் போலீசார் வழக்குப் பதிவு செய்து கணவன்-மனைவி இருவரையும் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story