திருவாரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,639 வழக்குகளுக்கு தீர்வு


திருவாரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,639 வழக்குகளுக்கு தீர்வு
x
தினத்தந்தி 14 Dec 2020 11:58 AM IST (Updated: 14 Dec 2020 11:58 AM IST)
t-max-icont-min-icon

திருவாரூர் மாவட்டத்தில் தேசிய மக்கள் நீதிமன்றத்தில் 1,639 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது.

திருவாரூர், 

நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள வழக்குகளை விரைந்து முடிக்கும் வகையில் சமரச தீர்வு காண்பதற்கு நாடு முழுவதும் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. இதனையொட்டி திருவாரூர் மாவட்ட ஒருங்கிணைந்த நீதிமன்றத்தில் நடந்த தேசிய மக்கள் நீதிமன்றத்திற்கு சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் தலைவரும், மாவட்ட முதன்மை நீதிபதியுமான சாந்தி தலைமை தாங்கினார். கூடுதல் நீதிபதி சுந்தர்ராஜன், தலைமை குற்றவியல் நீதிபதி விஜயகுமார், சார்பு நீதிபதி சரண்யா, குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி கோபாலகண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

இதேபோல் திருத்துறைப்பூண்டி, மன்னார்குடி, நீடாமங்கலம், வலங்கைமான் மற்றும் நன்னிலம் ஆகிய இடங்களில் உள்ள நீதிமன்றங்களிலும் தேசிய மக்கள் நீதிமன்ற நடந்தது.

1,639 வழக்குகளுக்கு தீர்வு

அப்போது சமரசத்திற்குரிய குற்ற வழக்குகள், காசோலை வழக்குகள், விபத்து இழப்பீடு வழக்குகள், குடும்ப வழக்குகள், ஜீவானம்சம் உள்பட 2,871 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. அதில் காசோலை, விபத்து மற்றும் குடும்ப வழக்குகள் என மொத்தம் 1,639 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. அதன்படி ரூ.2 கோடியே 50 லட்சத்து 47 ஆயிரத்து 888 தொகை வழங்க உத்தரவிடப்பட்டது என சார்பு நீதிபதி சரண்யா தெரிவித்துள்ளார்.

Next Story