ஆன்லைன் மூலம் அறிமுகமான பெண்ணிடம் ரூ.1½ லட்சம் நகை, செல்போனை இழந்த வாலிபர்
ஆன்லைன் மூலம் அறிமுகமான பெண்ணிடம் ரூ.1.50 லட்சம் நகைகள், செல்போனை இழந்த வாலிபர் போலீசில் புகார் அளித்தார்.
புனே,
புனே ராவட் பகுதியை சேர்ந்த 28 வயது வாலிபர் ஒருவருக்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஆன்லைன் மூலம் ஒரு பெண்ணின் அறிமுகம் ஏற்பட்டது. இதனை தொடர்ந்து அந்த வாலிபர், அப்பெண்ணிடம் தொடர்ந்து சாட்டிங் செய்து வந்தார். இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு உல்லாசம் அனுபவிக்க வாலிபரின் வீட்டிற்கு வருவதாக அப்பெண் தெரிவித்தார்.
இதனை நம்பிய வாலிபர் அப்பெண்ணை வீட்டிற்கு வரவழைத்தார். சில மணி நேரம் பேசிக்கொண்டிருந்த வாலிபர் கழிவறைக்கு சென்றார்.
அப்போது அப்பெண் கொண்டு வந்திருந்த ஒரு ரசாயன பொடியை குடிநீரில் கலந்தார். இது பற்றி அறியாத வாலிபர் அந்த குடிநீரை குடித்தார். சில நிமிடங்களில் அந்த வாலிபர் மயங்கி உள்ளார்.
இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திய அப்பெண் வீட்டில் இருந்த நகைகள், செல்போன், என ரூ.1 லட்சத்து 50 ஆயிரம் மதிப்புள்ள பொருட்களை திருடி கொண்டு தப்பிச்சென்றார். மயக்கம் தெளிந்த வாலிபர் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்தார்.
சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தார். இந்த புகாரின் படி போலீசார் வழக்கு பதிவு செய்து அப்பெண்ணை பிடிக்க விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் ரசாயன பொடி கலந்த குடிநீரை கைப்பற்றி ஆய்வக பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
Related Tags :
Next Story