திருப்புவனம் பகுதியில் தொடர் மழையால் 1000 ஏக்கரில் பயிரிட்ட வெங்காயம் அழுகின; இழப்பீடு கோரி கலெக்டரிடம் விவசாயிகள் மனு
திருப்புவனம் பகுதியில் தொடர் மழையால் 1000 ஏக்கரில் பயிரிட்ட வெங்காயம் அழுகின. இதனால் பாதிக்கப்பட்ட விவசாயிகள் இழப்பீடு கோரி கலெக்டரிடம் மனு கொடுத்தனர்.
குறை தீர்க்கும் கூட்டம்
சிவகங்கை கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட கலெக்டர் மதுசூதன் ரெட்டி, தலைமையில் நடைபெற்றது. கூட்டத்தில் இலவச வீட்டுமனைப் பட்டா, சமூக பாதுகாப்பு திட்டத்தின் கீழ் உதவித்தொகை கோருதல், வங்கிக்கடன், மாவட்ட ஊனமுற்றோர் மறுவாழ்வுத்துறை உதவித்தொகை மற்றும் உபகரணங்கள் கேட்டல், குடும்ப அட்டை கோருதல் மற்றும் இதர மனுக்கள் உள்ளிட்ட 620 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது.
இந்த மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க சம்பந்தப்பட்டதுறை அலுவலர்களுக்கு கலெக்டர் உத்தரவிட்டார். பின்னர் மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்தினருக்கு முதல்-அமைச்சர் நிவாரண நிதியிலிருந்து ரூ.3 லட்சத்திற்கான காசோலையினை கலெக்டர் வழங்கினார்.
இந்த கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, சமூகப் பாதுகாப்பு திட்ட அலுவலர் காமாட்சி, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை அலுவலர் தனலெட்சுமி மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
வெங்காயம் அழுகின
கூட்டத்தில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் ஒன்றிய துணைத் தலைவர் பி.என்.ஆர்.பழனிவேலு, ஞானசேகரன், நீலமேகம், கருப்பையா, முத்துராஜா, ராஜா உள்ளிட்ட விவசாயிகள் மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டியிடம் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
திருப்புவனம் தாலுகாவில் முக்குடி, செங்குளம், எம்.பறையங்குளம், வடுகன்குளம், எருக்களை, வெள்ளூர், காஞ்சிராங்குளம், சின்ன வலையங்குளம், ஜாரிபுதுக்கோட்டை ஆகிய 9 கிராமங்களில் கடந்த
அக்டோபர், நவம்பரில் சுமார் 1000 ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்யப்பட்டது. புெரவி புயல் சமயத்தில் தொடர்ந்து மழை பெய்ததால் திருகல்நோய் தாக்கி வெங்காயம் அழுகி விட்டன.
ஒரு ஏக்கரில் வெங்காயம் சாகுபடி செய்ய ரூ.50 ஆயிரம் செலவாகிறது. எனவே இந்த பகுதியை பேரிடர் பாதித்த பகுதியாக அறிவித்து வெங்காயம் பயிரிட்ட விவசாயிகளுக்கு இழப்பீடு நிவாரணம் வழங்க வேண்டும்.
இவ்வாறு அந்த மனுவில் கூறி இருந்தனர்.
நெல் கொள்முதல்
இதேபோல் த.மா.க. விவசாய அணி மாவட்ட தலைவர் கருமலை கதிரேசன் கொடுத்த மனுவில் கூறியுள்ளதாவது:-
சிவகங்கை மாவட்டம் இளையான்குடி, மானாமதுரை மற்றும் காளையார்கோவில், பகுதியில் ஜோதிரக நெல் அதிக அளவில் பயிரிடப்பட்டுள்ளது. இந்த நெல்லை கொள்முதல் செய்ய நுகர் பொருள்
வாணிப கழகத்தினர் மறுக்கின்றனர். எனவே நெல்கொள்முதல ்நிலையத்தில் ஜோதிரக நெல்லை கொள்முதல் செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறியிருந்தார்.
Related Tags :
Next Story