கேலி செய்து தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டிய 3 பேர் கைது


கேலி செய்து தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு சாவு தற்கொலைக்கு தூண்டிய 3 பேர் கைது
x
தினத்தந்தி 14 Dec 2020 11:16 PM GMT (Updated: 14 Dec 2020 11:16 PM GMT)

கேலி செய்து தொல்லை கொடுத்ததால் இளம்பெண் தூக்குப்போட்டு தற்கொலை செய்துகொண்டார். அவரை தற்கொலைக்கு தூண்டிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

மும்பை,

பண்டர்பூரை சேர்ந்த 17 வயது இளம்பெண் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். தகவல் அறிந்து சென்ற போலீசார் இளம்பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்தநிலையில் இளம்பெண்ணின் குடும்பத்தினர் அவர் தற்கொலை செய்யும் முன் எழுதி வைத்த கடிதத்தை நோட்டு புத்தகத்தில் இருந்து கைப்பற்றினர்.

அதில் இளம்பெண், “இந்திய நாட்டிற்காக ராணுவத்தில் சேர்ந்து பணியாற்ற வேண்டும் என்பதே எனது ஆசை. ஆனால் 3 பேர் தொடர்ந்து எனக்கு தொல்லை கொடுத்து வந்தனர். அதை தாங்கி கொள்ள முடியாமல் இந்த முடிவை எடுக்கிறேன். பாரத மாதாவே, அம்மா, அப்பாவே என்னை மன்னித்து கொள்ளுங்கள்” என எழுதி உள்ளார்.

இதேபோல 3 பேரில் ஒருவர் சமீபத்தில் இளம்பெண்ணின் கைப்பிடித்து இழுத்தும் கேலி செய்ததும் அதை வெளியே சொல்ல கூடாது என மிரட்டியது குறித்தும் அவர் கடிதத்தில் கூறியுள்ளார். இதையடுத்து போலீசார் சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து இளம்பெண்ணை தற்கொலைக்கு தூண்டிய 3 பேரையும் கைது செய்து உள்ளனர்.

Next Story