வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் கூடுதல் பாதுகாப்பு; நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தம்


வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் இருட்டு அறையிலும் தெளிவாக செயல்படும் கண்காணிப்பு கேமரா காட்சி
x
வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் இருட்டு அறையிலும் தெளிவாக செயல்படும் கண்காணிப்பு கேமரா காட்சி
தினத்தந்தி 16 Dec 2020 4:30 AM IST (Updated: 16 Dec 2020 4:30 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் கோட்டை அருங்காட்சியகத்தில் கூடுதல் பாதுகாப்பாக நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது.

கூடுதல் பாதுகாப்பு
வேலூர் கோட்டையில் அரசு அருங்காட்சியகம் அமைந்துள்ளது. இங்கு வேலூர் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட பண்டைய பொருட்கள் பொதுமக்கள் பார்வைக்காக வைக்கப்பட்டுள்ளது. இதுதவிர, பழங்கால சிலைகள், கல்வெட்டுகள், வாள்கள், கத்திகள், நாணயங்கள், ஓவியங்கள், துணிகள், கற்களால் ஆன ஆயுதங்கள் என எண்ணற்ற பொருட்கள் உள்ளது. பொதுமக்கள் பலர் ஆர்வமாக வந்து பார்த்துச் செல்கின்றனர்.

இப்பொருட்கள் அனைத்தும் அரிய பொருட்கள் என்பதால் அருங்காட்சியத்துக்கு பாதுகாப்பு அதிகமாக இருக்கும். அருங்காட்சியகம் முழுவதும் பல இடங்களில் 8 கண்காணிப்பு கேமராக்களும் பொருத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் பாதுகாப்பை அதிகப்படுத்த அருங்காட்சியக ஆணையர் உத்தரவிட்டார். அதன்படி கோட்டையில் நவீன கண்காணிப்பு கேமராக்கள் 
பொருத்தப்பட்டுள்ளன.

இருளிலும்...
இதுகுறித்து அருங்காட்சியக காப்பாட்சியர் சரவணன் கூறியதாவது:-

அருங்காட்சியகத்துக்கு கூடுதலாக பாதுகாப்பை அதிகரிக்க தற்போது புதிய 4 நவீன கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இந்த கேமராக்களில் பதிவாகும் காட்சிகள் இருளிலும் தெளிவாக தெரியும். இத்துடன் ஒலி வசதியும் செய்யப்பட்டுள்ளது. யாராவது உள்ளே புகுந்து பேசினால் அதையும் கேட்க முடியும். அடுத்த கட்டமாக மேலும் 4 கேமராக்கள் பொருத்தப்பட உள்ளது. இதில் பதிவாகும் 

காட்சிகளை செல்போனில் வீட்டில் இருந்தே கண்காணிக்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story