7-வது பொருளாதார கணக்கெடுப்பு; மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்; விருதுநகர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள்


விருதுநகர் மாவட்ட கலெக்டர் இரா கண்ணன்
x
விருதுநகர் மாவட்ட கலெக்டர் இரா கண்ணன்
தினத்தந்தி 16 Dec 2020 5:32 AM IST (Updated: 16 Dec 2020 5:32 AM IST)
t-max-icont-min-icon

மாவட்டத்தில் 7-வது பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற்று வரும் நிலையில் அதற்காக நியமிக்கப்பட்டுள்ள பணியாளர்களுக்கு மாவட்ட மக்கள் முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என கலெக்டர் கண்ணன் கேட்டுக்கொண்டுள்ளார்.

கணக்கெடுப்பு பணி

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

நாடு முழுவதும் பொருளாதார கணக்கெடுப்பு பணி நடைபெற்று வருகிறது. தமிழகத்திலும் இந்த பணியினை கடந்த வருடம் அக்டோபர் மாதம் தமிழக கவர்னர் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் கணக்கெடுப்பு பணிக்காக மேற்பார்வையாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நியமிக்கப்பட்டு அவர்களுக்கு இரண்டு கட்டமாக பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது.

மாவட்டத்திலுள்ள 11 வட்டாரங்களிலும் 76 அலகுகளாக பிரிக்கப்பட்டு கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. 5 ஆண்டுகள் இக்கணக்கெடுப்பில் குறிப்பாக வணிக நிறுவனங்களில் உற்பத்தி வினியோகம் விற்பனை மற்றும் சேவை நோக்கத்தோடு செய்யவும் அனைத்து வகையான பதிவு செய்யப்பட்ட மற்றும் பதிவு செய்யப்படாத வணிக நிறுவனங்களைப் பற்றிய கணக்கெடுப்பு ஆகும்.

உறுப்பினர்களின் எண்ணிக்கை
கணக்கெடுப்பு பணி 5 ஆண்களுக்கு ஒருமுறை நடைபெறுவதாகும். இந்த கணக்கெடுப்பில் குடும்பத் தலைவர் பெயர், குடும்ப உறுப்பினர்களின் எண்ணிக்கை, கல்வித்தகுதி, வயது, இனம், சமூகப்பிரிவு, கைபேசி எண், செய்யும் தொழில், சுய தொழில் முதலீடுகள் மற்றும் வேலை பார்க்கும் நபர்களின் எண்ணிக்கை, வருமான வரித்துறை, பதிவு எண், சரக்கு மற்றும் சேவை வரி பதிவு எண் கொண்ட விவரங்கள் சேகரிக்கப்படுகிறது.

பொது சேவை நிறுவனம்
இக்கணக்கெடுப்பு வழங்க முற்றிலும் அரசின் பொருளாதார திட்டமிடலுக்கு பயன்படுத்தப்பட உள்ளன. இந்த கணக்கெடுப்பை தேசிய புள்ளியியல் அலுவலகம் மற்றும் தமிழ்நாடு அரசின் பொருளியல் மற்றும் புள்ளியியல் துறையில் மேற்பார்வையின் கீழ் மத்திய அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொது சேவை நிறுவனம் மேற்கொண்டு வருகிறது.

எனவே கணக்கெடுப்பாளர்களிடம் தேவையான புள்ளிவிவரங்களை வழங்கி நாட்டின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு மாவட்ட மக்களை கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story