நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பலி


நண்பர்களுடன் கடலில் குளித்தபோது ராட்சத அலையில் சிக்கி என்ஜினீயரிங் மாணவர் பலி
x
தினத்தந்தி 16 Dec 2020 4:00 AM IST (Updated: 16 Dec 2020 5:34 AM IST)
t-max-icont-min-icon

எண்ணூரில் நண்பர்களுடன் கடலில் குளித்த என்ஜினீயரிங் கல்லூரி மாணவர் ராட்சத அலையில் சிக்கி பலியானார்.

திருவொற்றியூர், 

ஆவடி காந்திநகர் மேற்குபகுதி துவாரகா 3-வது தெருவில் வசித்து வருபவர் ராமகிருஷ்ணன். இவருடைய மகன் சஞ்சய் (வயது 23). இவர், ஆவடியில் உள்ள தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் ஆட்டோ மெக்கானிக்கல் என்ஜினீயரிங் 3-ம் ஆண்டு படித்து வந்தார்.

இவர், தனது நண்பர்களுடன் சேர்ந்து எண்ணூர் தாழங்குப்பம் பகுதியில் கடலில் குளித்தார். அப்போது கடலில் தோன்றிய ராட்சத அலை கல்லூரி மாணவர் சஞ்சயை கடலுக்குள் இழுத்துச்சென்றது.

இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சக நண்பர்கள், காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என கத்தி கூச்சலிட்டனர். சத்தம் கேட்டு ஓடிவந்த மீனவர்கள், கடலுக்குள் இறங்கி மாணவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அதற்குள் ராட்சத அலை மாணவரை கடலுக்குள் இழுத்துச்சென்றுவிட்டது.

இதில் நீரில் மூழ்கிய அவர் பரிதாபமாக இறந்தார். சிறிது நேரத்தில் அவரது உடல் கரை ஒதுங்கியது. இதுபற்றி எண்ணூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story