வேலைவாய்ப்பு அலுவலக பதிவை வேறு மாவட்டத்துக்கு மாற்ற விண்ணப்பிக்கலாம் - உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தகவல்
வேலைவாய்ப்பு அலுவலக பதிவை வேறு மாவட்டத்துக்கு மாற்ற விண்ணப்பிக்கலாம் என்று தூத்துக்குடி மாவட்டவேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டும் மைய உதவி இயக்குனர் பேச்சியம்மாள் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-
தூத்துக்குடி,
வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து வேறு மாவட்டத்துக்கு தங்களது பதிவை மாற்றம் செய்ய விரும்பும் மனுதாரர்களின் வசதிக்காக தமிழ்நாடு அரசு புதிய அரசாணை பிறப்பித்து உள்ளது. அதன்படி வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து ஒரு வருடம் நிறைவு செய்த மனுதாரர்கள் மட்டுமே தங்கள் பதிவை, தாங்கள் விரும்பும் மாவட்டத்துக்கு மாற்ற முடியும்.
பதிவை வேறு மாவட்டத்துக்கு மாறுதல் செய்ய விரும்பும் விண்ணப்பதாரர்கள் உரிய விண்ணப்பத்தை பதிவு உள்ள வேலைவாய்ப்பு அலுவலகத்தில் சமர்ப்பிக்கலாம். விண்ணப்பத்துடன் தங்களால் சுய சான்று அளிக்கப்பட்ட, மாறுதல் செய்ய விரும்பும் மாவட்டத்தை சேர்ந்த ரேஷன்கார்டு, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை, பாஸ்போர்ட், ஓட்டுநர் உரிமம் ஆகிய ஆவணங்களில் ஏதேனும் ஒன்றை இணைத்து, சமர்ப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இவ்வாறு அவர் தெரிவித்து உள்ளார்.
Related Tags :
Next Story