முக்கூடல் அருகே, வாலிபர் கொலையில் 3 பேர் கைது


முக்கூடல் அருகே, வாலிபர் கொலையில் 3 பேர் கைது
x
தினத்தந்தி 16 Dec 2020 3:00 AM IST (Updated: 16 Dec 2020 6:07 AM IST)
t-max-icont-min-icon

முக்கூடல் அருகே வாலிபர் கொலை வழக்கில் 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

முக்கூடல்,

நெல்லை மாவட்டம் முக்கூடல் அடுத்துள்ள பாப்பாக்குடி ரெங்கசமுத்திரம் நத்தம் காலனியில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு கோவில் விழா நடைபெற்றது. இதில் இருதரப்புக்கு இடையே மோதல் ஏற்பட்டது. அப்போது ஊர் தலைவரான பாபநாசம் (வயது 60) என்பவருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது. இதையடுத்து அவரது உறவினர்கள், இசக்கிராஜா (21) என்பவரை சரமாரியாக அரிவாளால் வெட்டினர். இதில் பலத்த காயம் அடைந்த இசக்கிராஜா பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலன் அளிக்காமல் இறந்தார். பாபநாசம் தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். அரிவாள் வெட்டை தடுக்க முயன்ற ஜெயகணேசனும் லேசான காயம் அடைந்தார்.

இதுகுறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இந்த நிலையில் கொலை தொடர்பாக பாபநாசத்தின் உறவினர்கள் மாரியப்பன் (47), ஜெயகணேசன் (26) மற்றும் பூவையா (36) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

இதேபோல் பாபநாசத்தை அரிவாளால் வெட்டிக் கொலை செய்ய முயற்சி செய்ததாக ஆனந்தராஜா, சங்கரநாராயணன் ஆகிய 2 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து தேடி வருகிறார்கள்.

Next Story