நாகை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தஞ்சை சரக டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார்மீனா ஆய்வு
நாகை மாவட்ட ஆயுதப்படை வளாகத்தில் தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி. ரூபேஷ்குமார்மீனா ஆய்வு செய்தார்.
நாகப்பட்டினம்,
நாகை மாவட்டத்தில் போலீஸ் அலுவலகம் மற்றும் ஆயுதப்படை வளாகங்களை தஞ்சை சரக போலீஸ் டி.ஐ.ஜி.ரூபேஷ்குமார் மீனா ஆய்வு செய்தார். முன்னதாக நாகை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் ஆய்வு மேற்கொண்டு முக்கிய கோப்புகளை பார்வையிட்டு ஆலோசனை வழங்கினார். பின்னர் ஆயுதப்படை வளாகத்தை பார்வையிட்டு முக்கிய கோப்புகள் மற்றும் பாதுகாப்பு தளவாடங்கள் உள்ளிட்டவற்றை பார்வையிட்டார்.
கட்டுமான பணிகள்
மேலும் நாகையில் போலீஸ் குடியிருப்பு கட்டுமான பணிகளை பார்வையிட்டு மழை பெய்து கொண்டிருப்பதால் கட்டுமான பணிகளை விரைந்து முடிக்க உத்தரவிட்டார்.
ஆய்வின் போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஓம்பிரகாஷ் மீனா, துணைபோலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், மற்றும் சப்-இன்ஸ்பெக்டர்கள் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story