சிவகங்கை அருகே புரவி எடுப்பு விழா: உடலில் சேற்றை பூசிக்கொண்டு ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன்
புரவி எடுப்பு விழாவையொட்டி உடலில் சேற்றை பூசியபடி ஊர்வலமாக வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர்.
சிவகங்கை அருகே புரவி எடுப்பு விழாவில் உடலில் சேற்றை பூசியபடி ஊர்வலமாக வந்து இளைஞர்கள் நேர்த்திக்கடன் செலுத்தினர்.
புரவி எடுப்பு விழா
சிவகங்கையை அடுத்த தமறாக்கியில் உள்ள கலியுகவரத அய்யனார், ஏழைகாத்தம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் புரவி எடுப்பு விழாவையொட்டி அன்று மாலை கிராமத்தினர் புரவி எடுத்து ஊர்வலமாக வந்தனர். தொடர்ந்து சுவாமிக்கு கிடா வெட்டி நேர்த்திக்கடன் செலுத்தினர்.
மேலும் நேர்த்திக்கடன் வேண்டி சுவாமி தரிசனம் செய்த பக்தர்கள் அந்த நேர்க்க்கடன் நிறைவேறியதும் இங்குள்ள மந்தை கோவிலில் இருந்து தங்களது உடலில் சேற்றை பூசியும், சேத்தாண்டி வேடமிட்டும் ஆடி, பாடி ஊர்வலமாக வந்து சாமியை தரிசனம் செய்தனர்.
ஏற்பாடு
இந்த நிகழ்ச்சியில் தமறாக்கி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமப்புற மக்கள் கலந்துகொண்டனர். இந்த விழாவிற்கான ஏற்பாடுகளை நான்கு ஊர் நாட்டு அம்பலம் மற்றும் கிராமத்தினர் செய்திருந்தனர்.
Related Tags :
Next Story