கலசபாக்கம் ஒன்றியத்தில், மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு காளை விடும் திருவிழா
மார்கழி மாத பிறப்பை முன்னிட்டு கலசபாக்கம் ஒன்நியத்தில் 3 இடங்களில் காளை விடும் திருவிழா நடந்தது. இதில் ஏராளமான இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
காளை விடும் விழா
கலசபாக்கம் ஒன்றியத்துக்கு உட்பட்ட மேல்சோழங்குப்பம், வீரளூர், ஆதமங்கலம் புதூர், கீழ்பாலூர், கடலாடி உள்பட பல்வேறு கிராமங்களில் ஒவ்வொரு ஆண்டும் பொங்கல் திருவிழாவின் போது காளை விடும் திருவிழா நடந்து வருகிறது. இதில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்தும் காளை மாடுகளை கொண்டு வந்து அவற்றின் கொம்புகளில் விலைஉயர்ந்த பட்டுப்புடவை மற்றும் பரிசுப் பொருட்களை வைத்து விழா நடத்தப்படும்.
இதே போன்று ஒவ்வொரு வருடமும் மார்கழி மாத பிறப்பு தினத்திலும் சில கிராமங்களில் காளை மாடு விடுவது வழக்கமாக கொண்டு உள்ளனர். இதில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் சுற்றுவட்டார கிராமங்களில் இருந்து வந்து கலந்து கொண்டு காளை மாடுகளை பிடித்து பரிசுகளை எடுத்துச் செல்வார்கள். தற்போது கொரோனா வைரஸ் தடுப்பு காரணமாக கோவில் திருவிழாக்கள் பொதுக்கூட்டங்கள் உள்ளிட்ட பொதுமக்கள் அதிகம் கூடும் நிகழ்ச்சிகளுக்கு அரசு தடை விதித்துள்ளது.
திரண்டனர்
இந்தநிலையில்நேற்று மார்கழி மாதப் பிறப்பை முன்னிட்டு கலசப்பாக்கம் ஒன்றியத்திற்குட்பட்ட கீழ்பாலூர், மேல்சோழங்குப்பம், வீரளூர் ஆகிய கிராமங்களில் காளை மாடு விடும் திருவிழா நடைபெற்றது. விழாவில் ஆயிரக்கணக்கான இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் திரண்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story