பள்ளிபாளையத்தில் விஷம் குடித்து டாக்டர் தற்கொலை


பள்ளிபாளையத்தில் விஷம் குடித்து டாக்டர் தற்கொலை
x
தினத்தந்தி 17 Dec 2020 4:28 PM IST (Updated: 17 Dec 2020 4:28 PM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையத்தில் டாக்டர் ஒருவர் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டார்.

பள்ளிபாளையம்,

பள்ளிபாளையத்தில் திருச்செங்கோடு சாலையில் தனியார் ஆஸ்பத்திரியை நடத்தி வந்தவர் டாக்டர் வெங்கடபதி (வயது 49). இவருடைய மனைவி தமயந்தி (42). இவர்களுக்கு ஓவியா (20) என்ற மகள் உள்ளார். கடந்த சில நாட்களாக டாக்டர் வெங்கடபதிக்கும், அவருடைய மனைவிக்கும் இடையே குடும்ப பிரச்சினை தொடர்பாக தகராறு ஏற்பட்டு வந்தது. இதனால் மன அழுத்தத்தில் இருந்த டாக்டர் வெங்கடபதி நேற்று முன்தினம் இரவு வீட்டில் விஷம் குடித்து விட்டார். அவர் விஷம் குடிக்கும் முன்பு தனது தாயார் கவுசல்யாவிற்கு தான் விஷம் குடித்து தற்கொலை செய்து கொள்ளப்போவதாக போனில் தகவல் தெரிவித்துள்ளார்.

இதையறிந்து பதறி போய் டாக்டரின் வீட்டுக்கு தாயார் விரைந்து வந்தார். அங்கு மயங்கி கிடந்த அவரை கவுசல்யா உடனடியாக பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றார். ஆனால் செல்லும் வழியில் வெங்கடபதி பரிதாபமாக இறந்தார்.

இந்த சம்பவம் குறித்து பள்ளிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story