பரமத்திவேலூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு உற்சாக வரவேற்பு
பரமத்திவேலூரில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு ஒன்றிய அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
பரமத்திவேலூர்,
பரமத்திவேலூரில் கரூர்-நாமக்கல் தேசிய நெடுஞ்சாலை வழியாக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கரூருக்கு சென்றார். அப்போது அவருக்கு, கபிலர் மலை மற்றும் பரமத்தி ஒன்றிய அ.தி.மு.க.வினர் மற்றும் பொதுமக்கள் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. நிகழ்ச்சியில், நாமக்கல் ஆவின் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு செயலாளர் தனசேகரன், முன்னாள் பேரூராட்சி தலைவர் பொன்னிமணி, ஒப்பந்ததாரர் எம்.எஸ்.வீரப்பன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர்கள் சேகர், ரவி, வெற்றிவேல், சுகுமாறன், நகர செயலாளர்கள் நாராயணன், பொன்னிவேல், நாமக்கல் மாவட்ட இலக்கிய அணி செயலாளர் விஜயகுமார், அரசு வழக்கறிஞர் லோகநாதன் உள்ளிட்ட அ.தி.மு.க. நிர்வாகிகள் தமிழக முதல்-அமைச்சருக்கு பூங்கொத்து மற்றும் சால்வை வழங்கி வரவேற்றனர்.
முதல்-அமைச்சரை காண வந்த பொதுமக்கள் சாலை இருபுறமும் நின்று வரவேற்றனர். அங்கு கூடியிருந்த ஏராளமான பொதுமக்கள் மற்றும் அ.தி.மு.க. தொண்டர்களை பார்த்து காரில் இருந்து வெளியே வந்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, கையசைத்து வரவேற்பை ஏற்றுக்கொண்டார். வரவேற்பின் போது, அமைச்சர்கள் தங்கமணி மற்றும் சரோஜா ஆகியோர் உடன் இருந்தனர். பின்னர் கரூரில் நடைபெற்று வரும் கொரோனா தடுப்புப்பணிகள் மற்றும் பல்வேறு நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்தல், புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் ஆகிய பணிகளை மேற்கொள்ள முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி காரில் புறப்பட்டு சென்றார்.
Related Tags :
Next Story