மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடக்கம் பயணிகள் மகிழ்ச்சி
மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில்சேவை தொடங்கப்பட்டது. இதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
மும்பை,
மத்திய ரெயில்வே கொரோனா ஊரடங்கு தொடங்குவதற்கு முன் டிரான்ஸ்ஹார்பர் வழித்தடத்தில் தானே- வாஷி, பன்வெல் இடையே ஏ.சி. மின்சார ரெயில்களை இயக்கி வந்தது. இந்தநிலையில் நேற்று முதல் மெயின் வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவையை தொடங்கி உள்ளது.
முதல் ஏ.சி. மின்சார ரெயில் அதிகாலை 5.42 மணிக்கு சி.எஸ்.எம்.டி.யில் இருந்து புறப்பட்டது.
திங்கள் முதல் சனி வரை மெயின்வழித்தடத்தில் 10 மின்சார ரெயில்சேவைகள் இயக்கப்பட உள்ளது. இதில் 4 ரெயில் சேவை சி.எஸ்.எம்.டி.- டோம்பிவிலி இடையேயும், 4 சேவை சி.எஸ்.எம்.டி.- குர்லா இடையேயும், 2 சேவை சி.எஸ்.எம்.டி.- கல்யாண் இடையேயும் இயக்கப்படுகிறது. இந்த ரெயில்கள் அனைத்து ரெயில் நிலையங்களிலும் நின்று செல்லும். தற்போது கொரோனா ஊரடங்கு காரணமாக அரசால் அனுமதிக்கப்பட்ட பயணிகள் மட்டும் இதில் செல்ல முடியும்.
மேலும் இதுகுறித்து மத்திய ரெயில்வே மக்கள் தொடர்பு அதிகாாி சிவாஜி சுதார் கூறுகையில், “சோதனை முயற்சியாக தற்போது மெயின் வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டுள்ளது. இதற்கு பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம்“ என்றார்.
மத்திய ரெயில்வே மெயின் வழித்தடத்தில் ஏ.சி. மின்சார ரெயில் சேவை தொடங்கப்பட்டதற்கு பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்து உள்ளனர்.
Related Tags :
Next Story