கல்லூரிகளில் இறுதி ஆண்டு வகுப்புகள் தொடங்கின கடும் கட்டுப்பாடுகளுடன் மாணவர்கள் அனுமதி
கல்லூரிகளில் இறுதியாண்டு மாணவர்களுக்கான வகுப்புகள் நேற்று தொடங்கின. கடும் கட்டுப்பாடுகளுடன் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப்பட்டனர்.
புதுச்சேரி,
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக கடந்த மார்ச் மாதம் இறுதியில் இருந்து பள்ளி, கல்லூரிகள் மூடப்பட்டன. ஆனாலும் ஆன்லைனில் வகுப்புகள் நடைபெற்று வந்தன. இந்த நிலையில் ஏற்கனவே மருத்து வக் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடந்து வந்தன.
17-ந்தேதி (நேற்று) முதல் கலை அறிவியல், என்ஜினீ யரிங், தொழில்நுட்பம், வேளாண்மை, மீன்வளம் மற்றும் கால்நடை மருத்துவ கல்லூரிகளில் இளநிலை இறுதியாண்டு வகுப்புகளை தொடங்க அரசு அனுமதித் திருந்தது. அதன்படி, நேற்று வகுப்புகள் தொடங் கின.
வகுப்புகளுக்கு வரும் மாணவர்கள் அனைவரும் முககவசம் கட்டாயம் அணிய வேண்டும், மத்திய, மாநில அரசுகளின் கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்ற வேண்டும் என்பது உள்பட பல்வேறு அறிவுரைகள் ஏற்கனவே வழங்கப்பட்டு இருந்தன.
அதன் அடிப்படையில் கல்லூரிகளில் மாணவ, மாணவிகள் அனுமதிக்கப் பட்டனர். நுழைவு வாயில் பகுதியில் தெர்மல் ஸ்கேனர் கருவி கொண்டு மாணவ, மாணவிகளின் உடல் வெப்ப நிலை பரிசோதனை செய்யப் பட்டும், கைகளில் கிருமிநாசினி திரவம் கொண்டு சுத்தம் செய்த பின்னரும் உள்ளே செல்ல அனுமதி அளிக்கப் பட்டது.
கல்லூரி வளாகத்துக்குள் மாணவர்கள் சமூக இடை வெளியை கடைபிடிக்க அறிவு றுத்தப்பட்டனர். மேலும் வகுப்பறை இருக்கை களில் 4 மாணவர்கள் அமர்ந்திருந்த இடத்தில் 2 பேர் மட்டுமே அமர கல்லூரி நிர்வாகங்கள் அனுமதித்தன.
இதுகுறித்து கல்லூரிக்கு வந்திருந்த மாணவ, மாணவி கள் கூறுகையில், ‘கொரோனா தொற்று காரணமாக 9 மாதங்களுக்கு பிறகு இறுதி யாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப் பட்டது மகிழ்ச்சி அளிக்கிறது. பல மாதங்களுக்கு பிறகு தோழிகளை சந்திப்பது மகிழ்ச்சியாக உள்ளது.
கல்லூரிகள் திறக்காமல் இறுதியாண்டில் ஆன்லைன் வகுப்பு, தேர்வு சற்று வித்தியா சமாக இருந்தது. கிராமப் புறங்களில் இருந்து நகர் பகுதிக்கு அரசு சார்பில் இயக்கப்பட்டு வந்த ஒரு ரூபாய் மாணவர்கள் சிறப்பு பஸ்களை மீண்டும் இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். கல்லூரிக்கு வருவ தால் தொற்று பரவும் அபாயம் இருக்க வாய்ப்புள்ளது என முதலில் பயந்தோம். ஆனால் கல்லூரி நுழைவு வாயில்களில் மாணவர்களுக்கு கிருமி நாசினி வழங்கப்பட்டது. அதேபோல் வகுப்பறையில் சமூக இடைவெளியை கடைப் பிடிக்க பேராசிரியர்கள் கண்காணித்து வருகின்றனர். எனவே பயமின்றி கல்லூரி களுக்கு மாணவர்களை பெற்றோர் அனுப்பிவைக் கலாம்’ என்று தெரிவித்தனர்.
சுமார் 9 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்லூரி வாசலை மிதித்ததால் மாணவ, மாணவிகள் உற்சாகத்துடன் காணப்பட்டனர். ஊரடங் கால் வீட்டில் முடங்கி இருந்த நேரத்தில் எப்படி பொழுதை கழித்தோம் என்பது குறித்து ஒருவருக்கொருவர் நினைவு களை பகிர்ந்து கொண்ட தையும் பார்க்க முடிந்தது.
Related Tags :
Next Story