போலீசார் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் ஆய்வின்போது டி.ஐ.ஜி. அறிவுரை


போலீசார் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் ஆய்வின்போது டி.ஐ.ஜி. அறிவுரை
x
தினத்தந்தி 18 Dec 2020 4:50 AM GMT (Updated: 18 Dec 2020 4:50 AM GMT)

நாகர்கோவிலில் ஆய்வு பணியை மேற்கொண்ட போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு, போலீசார் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டும் என்று அறிவுரை வழங்கினார்.

நாகர்கோவில், 

நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை முகாமில் போலீஸ் டி.ஐ.ஜி.யால் வருடாந்திர ஆய்வு மேற்கொள்ளப்படுவது வழக்கம். அதேபோல் இந்த ஆண்டுக்கான வருடாந்திர ஆய்வு நேற்று நடந்தது. அப்போது நெல்லை சரக போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு நாகர்கோவில் மறவன்குடியிருப்பில் உள்ள ஆயுதப்படை முகாமுக்கு நேற்று காலை வந்தார்.

அவருக்கு போலீஸ் அணிவகுப்பு மரியாதை அளிக்கப்பட்டது. அதனை ஏற்றுக்கொண்ட டி.ஐ.ஜி. ஆய்வு மேற்கொண்டார். அப்போது போலீசாரின் உடைகள், அவர்கள் பயன்படுத்தும் உபகரணங்கள், போலீஸ் வாகனங்கள் அனைத்தையும் பார்வையிட்டார். மேலும் அவற்றில் உள்ள குறைபாடுகளையும் கேட்டறிந்தார்.

அறிவுரை

பின்னர் போலீசாரிடம் குறைகளை கேட்டறிந்தார். அப்போது போலீசாரின் மத்தியில் பேசிய அவர் போலீஸ் பணியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார். மேலும் போலீசார் ஒழுக்கத்தை கடைபிடிக்க வேண்டியதின் அவசியம் குறித்தும் அறிவுரை வழங்கினார்.

அதன்பிறகு ஆயுதப்படை அலுவலகத்தில் உள்ள பதிவேடுகள் அனைத்தையும் ஆய்வு செய்தார். இந்த ஆய்வுப்பணியின்போது மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பத்ரி நாராயணன், துணை சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர்கள் உடன் இருந்தனர்.


Next Story