சத்துவாச்சாரியில் அம்மா மினி கிளினிக்; அமைச்சர் கே.சி.வீரமணி திறந்து வைத்தார்
வேலூர் சத்துவாச்சாரி தாட்கோ நகரில் அம்மா மினி கிளினிக் திறப்பு விழா நடந்தது. வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் தலைமை தாங்கினார்.
காட்பாடி அரசு ஆண்கள் பள்ளி பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் எஸ்.ஆர்.கே.அப்பு, ஆவின் தலைவர் த.வேலழகன், மாநகராட்சி கமிஷனர் சங்கரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். நகர்நல அலுவலர் சித்திரசேனா வரவேற்றார்.சிறப்பு விருந்தினராக அமைச்சர் கே.சி.வீரமணி கலந்துகொண்டு அம்மா மினி கிளினிக்கை திறந்து வைத்து, கர்ப்பிணிகளுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களை வழங்கினார்.
விழாவில் வேலூர் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. பொருளாளர் எம்.மூர்த்தி, தகவல் தொழில்நுட்ப பிரிவு மண்டல செயலாளர் ஜனனீ பி. சதீஷ்குமார், மாவட்ட துணை செயலாளர் ஜெயப்பிரகாசம், வர்த்தகர் அணி மாவட்ட பொருளாளர் சி.கே.சிவாஜி, பொதுக்குழு உறுப்பினர் சுகன்யா தாஸ், எம்.ஜி.ஆர். இளைஞர் அணி மாவட்ட தலைவர் பி.எம்.டி.ராஜ்குமார், செயலாளர் எஸ்.பி.ராகேஷ், சத்துவாச்சாரி கிழக்கு பகுதி அவைத்தலைவர் ஜி.எஸ்.ஏ.ஆறுமுகம், செயலாளர் ஏ.பி.எல்.சுந்தரம், 22-வது வட்ட செயலாளர் சி.கே.எஸ்.வினோத்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். முடிவில் உதவி கமிஷனர் மதிவாணன் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story