வேப்பனப்பள்ளி அருகே, ஒரு வயது பெண் குழந்தையை கொன்று ஏரியில் உடல் வீச்சு - போலீசார் விசாரணை


வேப்பனப்பள்ளி அருகே, ஒரு வயது பெண் குழந்தையை கொன்று ஏரியில் உடல் வீச்சு - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 18 Dec 2020 6:54 PM IST (Updated: 18 Dec 2020 6:54 PM IST)
t-max-icont-min-icon

வேப்பனப்பள்ளி அருகே ஒரு வயது பெண் குழந்தையை கொன்று உடலை ஏரியில் மர்ம நபர்கள் வீசி சென்றனர். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

வேப்பனப்பள்ளி,

கிருஷ்ணகிரி மாவட்டம் வேப்பனப்பள்ளி அருகே தமிழகம் மற்றும் ஆந்திர எல்லையில் ஓ.என்.கொத்தூர் கிராமம் உள்ளது. இதன் அருகே உள்ள ஏரியில் நேற்று ஒரு வயது பெண் குழந்தையின் பிணம் ஒன்று மிதந்தது.

இதைப் பார்த்த அந்த பகுதி பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்து, ஆந்திர மாநிலம் குடிப்பள்ளி போலீஸ் நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். இதையடுத்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார் குழந்தையின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக குப்பம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

அந்த குழந்தை ஆந்திர எல்லைப்பகுதியை சேர்ந்தவர்களின் குழந்தையா? அல்லது வேப்பனப்பள்ளி சுற்று வட்டாரத்தில் இருந்து கடத்தப்பட்டதா? என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள். வேப்பனப்பள்ளி அருகே ஆந்திர எல்லையில் பெண் குழந்தையை கொன்று ஏரியில் வீசி சென்ற சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

Next Story