பெங்களூருவில் புகைப்படத்தை வெளியிடுவதாக மிரட்டி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.16 லட்சம் பறிப்பு
பெங்களூருவில் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவதாக மிரட்டி கம்ப்யூட்டர் என்ஜினீயரிடம் ரூ.16 லட்சம் பறிக்கப்பட்ட சம்பவம் நடந்து உள்ளது. இதுதொடர்பாக டேட்டிங் செயலியில் பழகிய 2 பெண்கள் மீது புகார் அளிக்கப்பட்டு உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு ஒயிட்பீல்டு பகுதியில் 25 வயது வாலிபர் ஒருவர் வசித்து வருகிறார். இவர் ஐ.டி. நிறுவனத்தில் கம்ப்யூட்டர் என்ஜினீயராக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் என்ஜினீயருக்கு, டேட்டிங் செயலி மூலம் ஒரு இளம்பெண்ணுடன் பழக்கம் ஏற்பட்டது. அந்த இளம்பெண் தனது பெயரை சுவேதா என்று அறிமுகம் செய்து கொண்டார். பின்னர் 2 பேரும் தங்களது செல்போன் எண்களை பரிமாறி பேசி வந்தனர்.
இந்த நிலையில் என்ஜினீயரிடம் ரூ.2 ஆயிரத்தை ஆன்லைன் மூலம் பரிமாற்றம் செய்தால், இளம்பெண்கள் நிர்வாணமாக வீடியோ கால் பேசுவார்கள் என்றும், எனது தோழியான நிகிதா என்பவர் கூட இந்த மாதிரி தொழில் செய்கிறார் என்றும் சுவேதா கூறியதாக தெரிகிறது. இதனை நம்பிய என்ஜினீயரும், உனது தோழி நிகிதாவை என்னிடம் நிர்வாணமாக வீடியோ கால் பேச சொல் என்று கூறியுள்ளார். இதையடுத்து நிகிதாவின் போன்-பே நம்பரை கொடுத்த சுவேதா, இந்த நம்பருக்கு ரூ.2 ஆயிரம் செலுத்தினால் நிகிதா, நிர்வாணமாக வீடியோ கால் பேசுவார் என்று கூறியுள்ளார். அதன்பேரில் போன்-பே மூலம் என்ஜினீயரும் ரூ.2 ஆயிரத்தை செலுத்தி உள்ளார்.
சிறிது நேரத்தில் என்ஜினீயரின் செல்போன் எண்ணுக்கு ஒரு அழைப்பு வந்தது. அதில் எதிர்முனையில் பேசிய ஒரு பெண் தனது பெயர் நிகிதா என்று அறிமுகம் செய்தார். பின்னர் வாட்ஸ்- அப்பில் வீடியோ கால் செய்யும்படி என்ஜினீயரிடம் கூறினார். அதன்பேரில் என்ஜினீயரும், வாட்ஸ்-அப்பில் வீடியோ கால் செய்தார்.
அப்போது வாட்ஸ்-அப்பில் ஒரு இளம்பெண்ணும், என்ஜினீயரிடம் பேசினார். அப்போது அந்த பெண் கேட்டு கொண்டதன்பேரில் என்ஜினீயர் தனது ஆடைகளை கலைத்து நிர்வாணமாக நின்றதாக தெரிகிறது. இதனை வாட்ஸ் -அப்பில் பேசிய பெண் ஸ்கீரின் சாட் எடுத்து வைத்து கொண்டார். பின்னர் என்ஜினீயரை தொடர்பு கொண்டு பேசிய நிகிதாவும், சுவேதாவும் உனது நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடாமல் இருக்க பணம் தர வேண்டும். இல்லாவிட்டால் நிர்வாண புகைப்படத்தை சமூக வலைத்தளங்களில் வெளியிடுவோம் என்று மிரட்டி உள்ளனர். இதனால் பயந்து போன என்ஜினீயர் பல்வேறு தவணைகளில் ரூ.16 லட்சம் வரை செலுத்தி உள்ளார். ஆனாலும் அவரிடம் தொடர்ந்து பணம் கேட்டு நிகிதாவும், சுவேதாவும் தொல்லை கொடுத்து வந்ததாக தெரிகிறது. இதனால் மனம் உடைந்த என்ஜினீயர் சம்பவம் குறித்து ஒயிட்பீல்டு சைபர் கிரைம் போலீசில், 2 பெண்கள் மீதும் புகார் கொடுத்து உள்ளார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Related Tags :
Next Story