நாலச்சோப்ராவில் போதைப்பொருளுடன் நைஜீரிய பேராசிரியர் கைது
நாலச்சோப்ராவில் போதைப்பொருளுடன் நைஜீரிய பேராசிரியர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மும்பை,
மும்பை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் ரகசிய தகவலின் பேரில் நேற்று முன்தினம் நாலச்சோப்ராவில் நைஜீரியர் ஒருவரை பிடித்து சோதனை நடத்தினர். அப்போது அவரிடம் இருந்து 10.2 கிராம் கொகைகன் மற்றும் எல்.எஸ்.டி. போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணையில், அவர் நைஜீரியாவில் கல்லூரி பேராசிரியராக பணியாற்றிய நிவாக்வு பிரின்சில்வில் சிகா என்பது தெரியவந்தது. 2017-ம் ஆண்டு அவர் இந்தியாவுக்கு சுற்றுலா விசாவில் வந்து உள்ளார். பின்னர் விசா காலம் முடிந்த பிறகும் சட்டவிரோதமாக தங்கி இருக்கிறார். மேலும் அவர் இந்தியும் கற்று இருப்பது தெரிவந்தது.
அவருக்கு பெரிய அளவில் போதைப்பொருள் வியாபாரத்தில் ஈடுபடும் கும்பல், பிரபலங்களுடன் தொடர்பு இருக்கலாம் என கூறப்படுகிறது. எனவே அதிகாரிகள் அவரது செல்போன், மடிக்கணினி போன்ற எலெக்ட்ரானிக் சாதனங்களை பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எனினும் அவர் விசாரணைக்கு ஒத்துழைக்க மறுப்பதாக அதிகாரி ஒருவர் கூறினார்.
Related Tags :
Next Story