சிவகிரி வட்டார பகுதியில் விவசாய பணிகளை கலெக்டர் பார்வையிட்டார்
சிவகிரி வட்டார பகுதியில் விவசாய பணிகளை கலெக்டர் சமீரன் பார்வையிட்டார்.
சிவகிரி,
வாசுதேவநல்லூர், சிவகிரி வட்டார பகுதிகளுக்கு தென்காசி மாவட்ட கலெக்டர் சமீரன் சென்று அங்கு மேற்கொள்ளப்பட்டு வரும் வேளாண்மை பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். சிவகிரி பகுதியில் கரும்பு பயிர்களை கலெக்டர் பார்வையிட்டார்.
அப்போது, கரும்பு விவசாயிகள் சங்கத்தின் நிர்வாகிகள் கூறுகையில், தனியார் சர்க்கரை ஆலைக்கு அனுப்பப்பட்ட கரும்புக்கு உரிய நிலுவைத்தொகையினை இதுவரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தரவில்லை. பல முறை போராட்டம் நடத்தியும், பேச்சுவார்த்தை நடத்தியும் எந்த பலனும் இல்லை. இதனால் விவசாயிகள் சிரமப்படுவதாக எடுத்துரைத்தனர்.
சிந்தாமணி கிராமத்தில் நெல் எந்திர நடவு வயல், சுப்பிரமணியாபுரம் கிராமத்தில் நெல் விதைப்பண்ணை, தேவிப்பட்டணம் கிராமத்தில் கரும்பு பயிரில் சொட்டு நீர்ப்பாசனம் மற்றும் விவசாயிகள் கலந்துகொண்ட பண்ணைப்பள்ளியில் வேளாண் அறிவியல் மைய தொழில்நுட்ப வல்லுனர் சுகுமார் மற்றும் பணி நிறைவு பெற்ற வேளாண்மை அலுவலர் ராமசாமி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற பயிற்சி வகுப்பினையும் கலெக்டர் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
ஆய்வின்போது, வேளாண்மை இணை இயக்குனர் (பொறுப்பு) நல்லமுத்துராஜா, தோட்டக்கலைத்துறை துணை இயக்குனர் ஜெயபாரதி மாலதி மற்றும் வேளாண்மை துணை இயக்குனர் (பொறுப்பு) சேதுராமலிங்கம், வேளாண்மை உதவி இயக்குனர் இளஞ்செழியன், தோட்டக்கலை உதவி இயக்குனர் பவித்ரா, வேளாண்மை துணை அலுவலர் வைத்திலிங்கம், தோட்டக்கலை அலுவலர் நந்தகுமார், உதவி அலுவலர்கள் வைகுண்டசாமி, சண்முகவேல்ராஜன், வேளாண்மை உதவி அலுவலர்கள் நயினார், கிருஷ்ண சங்கீதா, வட்டார தொழில்நுட்ப மேலாளர் செல்வகுமார், உதவி தொழில்நுட்ப மேலாளர் ஜெயமுருகன் ஆகியோர் உடனிருந்தனர்.
Related Tags :
Next Story