சங்கரன்கோவிலில் விவசாயிகளுக்கு ரூ.27½ லட்சம் நலத்திட்ட உதவிகள் - அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்
சங்கரன்கோவிலில் விவசாயிகளுக்கு ரூ.27½ லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
சங்கரன்கோவில்,
சங்கரன்கோவில் வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக வளாகத்தில் வேளாண்மைத்துறை மற்றும் தோட்டக்கலைத்துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்பு இயக்க திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட கலெக்டர் சமீரன் தலைமை தாங்கினார். அமைச்சர் ராஜலட்சுமி பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினாா்.
பின்னா் அவர் பேசுகையில், “முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இரண்டாம் பசுமை புரட்சியை நிலைநிறுத்தும் வண்ணம் வேளாண்மைத்துறை மூலம் பல்வேறு திட்டங்களை வழங்கி விவசாயிகளின் நாயகனாக விளங்கி வருகிறார். அவரும் ஒரு விவசாயியாக இருப்பதால் விவசாயிகளின் சிரமங்கள் பற்றி நன்கு அறிவாா். தென்காசி மாவட்டம் விவசாயம் நிறைந்த பூமியாகும். இங்கு விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கு தேவையான அனைத்து திட்டங்களையும் வேளாண்மைத்துறையின் மூலமாக தங்குதடையின்றி வழங்கப்பட்டு வருகிறது. மேலும் விவசாயிகள் பயன்பெறும் வகையில் உபகரணங்கள் மற்றும் எந்திரங்கள் வேளாண்மை பணிக்கு பயன்படும் வகையில் புதிய திட்டங்கள் தொடக்்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது. இந்த திட்டங்களை விவசாயிகள் வேளாண்மைத்துறை மூலம் பெற்று தங்களின் பொருளாதாரத்தை உயா்த்தி பயன்பெற வேண்டும்” என்றார்.
முன்னதாக நிகழ்ச்சியில் வேளாண்மைத்துறை மூலம் தேசிய உணவு பாதுகாப்பு இயக்கத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சத்து 15 ஆயிரம் மதிப்புள்ள சுழல்கலப்பை, ரூ.34 ஆயிரம் மானியத்தில் 14 பயனாளிகளுக்கும், ரூ.1 லட்சத்து 20 ஆயிரம் மதிப்புள்ள சுழல்கலப்பை ரூ.42 ஆயிரம் மானியத்தில் 10 பயனாளிகளுக்கும், ரூ.8 ஆயிரம் மதிப்புள்ள விசைத்தெளிப்பான் ரூ.3 ஆயிரத்து 800 மானியத்தில் 6 பயனாளிகளுக்கும், ஒருங்கிணைந்த பண்ணையத்திட்டத்தின் கீழ் ரூ.1 லட்சம் மானியத்தில் 2 பயனாளிகளுக்கு ரூ.2 லட்சம் மதிப்பில் கறவை மாடுகள், தோட்டக்கலைத்துறை மூலம் ரூ.1 லட்சத்து 30 ஆயிரம் மதிப்பிலான பவர்டில்லர் ஒரு பயனாளிக்கும், மொத்தம் 33 பயனாளிகளுக்கு ரூ.27.62 லட்சம் மதிப்பிலான உபகரணங்களை அமைச்சர் ராஜலட்சுமி வழங்கினார்.
நிகழ்ச்சியில் சங்கரன்கோவில் உதவி கலெக்டர் முருகசெல்வி, வேளாண்மை இணை இயக்குனர் நல்லமுத்துராஜா, மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் சேதுராமலிங்கம், மாவட்ட கூட்டுறவு அச்சக சங்கத்தலைவர் கண்ணன், வேளாண்மை உதவி இயக்குனர்கள் பொன்னுராஜ், சிவகுருநாதன், நயினார் முகம்மது, இளஞ்செழியன், சங்கர், கால்நடை மருத்துவர் வசந்தா உள்பட அரசு அலுவலர்கள் மற்றும் கட்சி நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story