மாடப்பள்ளி அருகே, கறவை மாடுகளை தாக்கும் பெரியம்மை நோயை தடுப்பது குறித்து விழிப்புணர்வு முகாம்; கலெக்டர் தொடங்கி வைத்தார்
திருப்பத்தூர் மாவட்ட கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் கறவை மாடுகள் மற்றும் ஆடுகளை தாக்கும் பெரியம்மை நோயிலிருந்து எவ்வாறு காக்க வேண்டும் என்பது குறித்து விழிப்புணர்வு முகாம் மாடப்பள்ளி அருகே உள்ள கோனேரிக்குப்பம் கிராமத்தில் நடைபெற்றது.
கால்நடைத்துறை இணை இயக்குனர் நவநீதகிருஷ்ணன் தலைமை தாங்கினார். உதவி இயக்குனர் டாக்டர் நாசர் முன்னிலை வகித்தார், மாவட்ட கலெக்டர் சிவன்அருள் கலந்துகொண்டு விழிப்புணர்வு முகாமை தொடங்கி வைத்து துண்டுப்பிரசுரங்களை கால்நடை வளர்ப்பவர்களுக்கு வழங்கினார் பின்னர் அவர் பேசியதாவது மாடுகளுக்கு பெரியம்மை நோய் தாக்கும் கறவை மாடுகள் காய்ச்சல் காணப்படும் சிறு சிறு கட்டிகள் காணப்படும் கால் வீக்கம் இருக்கும் அப்படி இருந்தால் உடனடியாக கால்நடை மருத்துவமனையில் டாக்டர்கள் கூறும் சிகிச்சை அளிக்கப்பட வேண்டும் பெரியம்மை பாதிக்கப்பட்ட மாட்டை தனிமைப்படுத்த வேண்டும், சுத்தமாக வைக்கவேண்டும் மற்ற மாடுகளிலிருந்து தனியாக பிரித்து தனி தீவனம் குடிநீர் வைக்க வேண்டும் என அவர் தெரிவித்தார் பின்னர் முகாமில் 450 ஆடு மாடுகளுக்கு குடற்புழு நீக்கம் ஊசி போடப்பட்டது முகாமில் உதவி மருத்துவர் ரகமத்துல்லா உட்பட பலர் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story