தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி நீரில் மூழ்கி பலி - போலீசார் விசாரணை


தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி நீரில் மூழ்கி பலி - போலீசார் விசாரணை
x
தினத்தந்தி 19 Dec 2020 7:54 PM IST (Updated: 19 Dec 2020 7:54 PM IST)
t-max-icont-min-icon

தென்பெண்ணை ஆற்றில் அடித்துச்செல்லப்பட்ட மாற்றுத்திறனாளி நீரில் மூழ்கி பலியானார். மேலும் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

திருக்கோவிலூர், 

திருக்கோவிலூரை அடுத்த சீர்பாத நல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் கோபால் மகன் கோவிந்தன்(வயது 45). மாற்றுத்திறனாளியான இவர் நேற்று காலை மணலூர்பேட்டை அருகே உள்ள பள்ளிச்சந்தம் கிராமத்தில் வசிக்கும் தனது தங்கை வீட்டிற்கு செல்வதற்காக தென்பெண்ணை ஆற்றில் இறங்கி கரையை கடக்க முயன்றார். பாதி தூரம் சென்றதும் ஆற்றில் தண்ணீர் வரத்து அதிகரித்ததால் கோவிந்தன் ஆற்று வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். அவர் என்ன ஆனார் என்று தெரியவில்லை?இது குறித்து போலீஸ் மற்றும் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் மணலூர்பேட்டை போலீசாரும், தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து தென்பெண்ணை ஆற்று வெள்ளத்தில் அடித்துச்செல்லப்பட்ட கோவிந்தனை தேடினர். நீண்ட நேரமாக தேடியும் அவரை காணவில்லை.

இந்த நிலையில் மதியம் திருவரங்கம் அருகே தென்பெண்ணை ஆற்றின் கரையோரம் கோவிந்தன் பிணமாக கிடந்தார். தகவல் அறிந்து வந்த மணலூர்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் அகிலன் தலைமையிலான போலீசார் கோவிந்தன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருக்கோவிலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது குறித்து வழக்கு பதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Next Story