விருத்தாசலம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி


விருத்தாசலம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலி
x
தினத்தந்தி 19 Dec 2020 8:47 PM IST (Updated: 19 Dec 2020 8:47 PM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலம் அருகே ஏரியில் மூழ்கி வாலிபர் பலியானார்.

விருத்தாசலம்,

விருத்தாசலம் அருகே ஆலிச்சிக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரமேஷ் (40). விவசாயி. இவருடைய மனைவி செல்வராணி (37). இவர் களுக்கு தேஜா (17) என்கிற மகனும், 2 மகள்களும் உள்ளனர். இந்நிலையில் தேஜா நேற்று அதே பகுதியில் உள்ள பெரிய ஏரியில் குளிப்பதற்காக தன்னுடைய நண்பர்களுடன் சென்றார்.

அங்கு அவர்கள் ஏரியில் இறங்கி குளித்த போது, எதிர்பாராதவிதமாக தேஜா தண்ணீரில் மூழ்கி தத்தளித்தார். இதை பார்த்த அவரது நண்பர்கள் மற்றும் அக்கம், பக்கத்தினர் ஓடி வந்து அவரை மீட்டனர். இருப்பினும் அவர் சுயநினைவு இன்றி காணப்பட்டார். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனையில் சேர்த்தனர்.

அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர். இது பற்றி அறிந்ததும் கருவேப்பிலங்குறிச்சி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் இறந்த தேஜா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

முன்னதாக இறந்த தேஜா உடலை பார்த்து அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதது காண்போர் நெஞ்சை கரைய வைப்பதாக இருந்தது. இது பற்றிய புகாரின் பேரில் கருவேப்பிலங்குறிச்சி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story