கரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள்


கரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள்
x
தினத்தந்தி 20 Dec 2020 6:18 AM IST (Updated: 20 Dec 2020 6:18 AM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்டத்தில் ரூ.2 கோடியில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தொடங்கி வைத்தார்.

கரூர், 

கரூர் மாவட்டத்திற்குட்பட்ட மண்மங்கலம், புஞ்சை கடம்பன் குறிச்சி, நன்னியூர் ஆகிய ஊராட்சிகளில் ரூ.2 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரத்தில் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் தொடக்க விழா நடைபெற்றது. இதில், போக்குவரத்துத்துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு மேற்கண்ட பணிகளை பூமிபூஜையிட்டு தொடங்கி வைத்தார். இதில், மண்மங்கலம் ஊராட்சியில் ரூ.21 லட்சத்தில் வேளாண்மை கூட்டுறவு சேமிப்பு கிடங்கு, ரூ.2 லட்சத்தில் கிழக்கூரில் சிமெண்டு சாலை, புஞ்சை கடம்பங்குறிச்சி ஊராட்சி பெரியவள்ளிபாளையத்தில் ரூ.24 லட்சத்து 25 ஆயிரம் மதிப்பில் இரண்டு பேவர்பிளாக் சாலை, ஒரு மழைநீர் வடிகால், பண்டுதகாரன்புதூரில் ரூ.20 லட்சத்து 77 ஆயிரத்தில் 6 பேவர்பிளாக் சாலை, பால்வார்பட்டியில் ரூ.34 லட்சத்து 67 ஆயிரத்தில் 4 பேவர் பிளாக் சாலை, ஒரு வடிகால், பெரியவரப்பாளையம் காலனியில் ரூ.26 லட்சத்து 25 லட்சத்தில் 2 பேவர் பிளாக் சாலை, 2 மயானங்களுக்கு எரியூட்டு கொட்டகை மற்றும் சுற்றுச்சுவர்.

கடம்பங்குறிச்சி பகுதியில் ரூ.13 லட்சத்து 11 லட்சமத்தில் 2 பேவர் பிளாக் சாலை, நன்னியூர் ஊராட்சி என்.புதூர் பகவதியம்மன் கோவில் அருகில் ரூ.6 லட்சத்து 50 ஆயிரத்தில் பேவர்பிளாக் சாலை, செவ்வந்திபாளையத்தில் ரூ.24 லட்சத்து 4 ஆயிரத்தில் இரண்டு மழைநீர் வடிகால் , கோவில்பாளையத்தில் ரூ.5 லட்சத்து 51 ஆயிரத்தில் தானியகிடங்கு,, சிந்தாயூர் மற்றும் எல்லையூரில் தலா ரூ.17 லட்சத்தில் இரண்டு வேளாண்மை கூட்டுறவு சேமிப்பு கிடங்கு என ெமாத்தம் ரூ.2 கோடியே 12 லட்சத்து 46 ஆயிரம் மதிப்பில் புதிய வளர்ச்சி திட்டப்பணிகளை தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. பின்னர் உரிய காலத்தில் பணிகளை முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டுவர சம்பந்தப்பட்ட பொறியாளர்கள் மற்றும் ஒப்பந்ததாரர்களுக்கு அமைச்சர் அறிவுரை வழங்கினார். இந்நிகழ்ச்சியின்போது, அப்பகுதி பொதுமக்கள் அளித்த பல்வேறு கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்ட போக்குவரத்துத்துறை அமைச்சர் அந்த மனுக்களின் மீது உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுரை வழங்கினார்.


Next Story