ஏழை, நடுத்தர மக்களின் நலனுக்காக அம்மா மினி கிளினிக் கொண்டுவரப்பட்டுள்ளது; அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேச்சு
கோவை மாவட்டம் வேடப்பட்டி, பீளமேடு மசக்காளிபாளையம், காந்திபுரம் ஆகிய இடங்களில் கோவை மாவட்ட பொது சுகாதாரத்துறை மற்றும் நோய் தடுப்பு மருந்து துறை சார்பில் முதல்-அமைச்சரின் அம்மா கிளினிக்குகளை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தொடங்கி வைத்தார்.
அப்போது அவர் பேசியதாவது:-
தமிழக முதல்-அமைச்சரின் தலைமையின் கீழ் அரசு ஏழை, எளிய மக்களின் நன்மை பயக்கும் திட்டங்களை சிறப்பான முறையில் செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக தற்போது முதல்-அமைச்சரின் அம்மா மினி கிளினிக் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. கிராமங்கள் மற்றும் நகரப் பகுதிகளில் வாழும் ஏழை, நடுத்தர எளிய மக்களின் உடல் நலனை கருத்தில் கொண்டு சிகிச்சைக்கு
வருபவர்களின் சிரமம், செலவு மற்றும் நேரம் இவைகளை குறைக்கும் வகையில் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளன. இவ்வாறு அவர் பேசினார்.
அதன்பின்னர் கர்ப்பணி தாய்மார்களுக்கு தாய் சேய் ஊட்டச்சத்து பெட்டகங்களை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி வழங்கினார்.
நிகழ்ச்சிகளில், எம்.எல்.ஏ.க்கள் அம்மன் அர்ச்சுனன், வி.சி.ஆறுக்குட்டி, பி.ஆர்.ஜி.அருண்குமார், மாவட்ட கலெக்டர் ராஜாமணி, கோவை மாநகராட்சி ஆணையாளர் குமாரவேல் பாண்டியன், கோவை மாநகர் மாவட்ட எம்.ஜி.ஆர். இளைஞர் அணி செயலாளர் கே.ஆர்.ஜெயராம், சிங்கைமுத்து, பகுதி செயலாளர்கள் பிந்துபாலு, சுப மணிகண்டன், சிவக்குமார், வெள்ளிங்கிரி, தம்பு என்கிற மவுனசாமி, வர்த்தக அணி மாநகர் மாவட்ட செயலாளர் அர.தமிழ்முருகன், அண்ணா தொழிற்சங்க மாநகர் மாவட்டத் தலைவர் சிங்கைபாலன், ரியல் ரங்கராஜ், முன்னாள் கவுன்சிலர்கள் சால்ட் வெள்ளிங்கிரி, மாரப்பன், கைத்தறி முத்துசாமி உள்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர்.
Related Tags :
Next Story